75 செய்தி

1.8K 101 14
                                    

75 செய்தி

போலீஸ் ஜீப்பை விடாமல் துரத்திச் சென்றான் தாமஸ். ஒரு திருப்பத்தை அவன் கடக்க முயன்ற போது, திடீரென்று எதிரில் வந்த காரினால் தடுமாறி கீழே விழுந்தான். அவனுடைய கைபேசி அவனுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து நழுவி விழுந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. நடைபாதை கல்லில் இடித்து அவன் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். மெல்ல தன் சுய நினைவை இழந்தான் தாமஸ். யாரோ ஒருவர் ஆட்டோவை அழைத்து அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். போலீஸ் ஜீப்பை அவன் தவற விட்டு விட்டான் என்று நாம் கூற வேண்டிய அவசியமில்லை.

அவனுடைய அழைப்புக்காக காத்திருந்தான் ஸ்ரீராம். அவனுடைய மாமனாரை காவலர்கள் எந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்று தெரிந்துகொள்ள காத்திருந்தான். தனது கைபேசியை அடிக்கடி எடுத்துப் பார்த்தபடி இருந்தான். ஒருவேளை, தாமஸ் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கலாமோ என்ற எண்ணத்துடன். காமராஜை சந்தித்து உண்மையில் அவர் மனதில் இருப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான் ஸ்ரீராம். அவருடைய அன்றாட தேவைக்கு அவரிடம் பணம் இல்லாவிட்டால் எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து மிதிலாவுக்காக நகை வாங்க வேண்டும்? அந்த நகையை மிதிலாவிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவன் கைவிட்டான். அவரை சந்தித்து அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்று தெரியும் வரை அதை அவனால் மிதிலாவிடம் கொடுக்க முடியாது. தன்னுடைய அப்பா மீண்டும் திருட்டு குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்றது அவளுக்கு தெரிந்தால் நிச்சயம் அவள் மனம் ஏமாற்றம் அடையும்.

காபியுடன் அங்கு வந்த மிதிலா, அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அப்படி என்ன தான் அவன் இவ்வளவு தீவிரமாய் யோசித்துக் கொண்டு இருக்கிறான்? தன்னை சுதாகரித்துக் கொண்டு குறுநகை புரிந்தான் ஸ்ரீராம்.

"ஃபார்ம் ஹவுஸ்ல நடந்த விஷயம் உங்களை இவ்வளவு தூரம் டிஸ்டர்ப் பண்ணுச்சின்னு என்னால் நம்ப முடியல" என்றாள் தான் கொண்டு வந்த காபியை அவனிடம் நீட்டியபடி.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now