76 கொலையாளி

1.7K 99 11
                                    

76 கொலையாளி

ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

"என்ன ஆச்சு எஸ்ஆர்கே? இந்த நியூஸை பார்த்து நீ நிம்மதியாவேன்னு எதிர்பார்த்தேன்... உன்னுடைய பரம எதிரி செத்துட்டாரு..." என்றான் குகன் குதூகலமாக.

"கொலை செய்யப்பட்டார்" என்று அவன் கூறியதை திருத்தினான் ஸ்ரீராம்.

"ஆமாம். வேலாயுதம் மாதிரியான ஒரு ஆளுக்கு இப்படிப்பட்ட முடிவு தான் வரணும்... அதுல பரிதாப பட எதுவும் இல்ல"

ஆம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"இதை நான் மிதிலாகிட்ட சொல்ல போறேன். அவங்க ரொம்ப சந்தோஷபடுவாங்க" என்றான் ஆர்வமாக.

"வேண்டாம்... கொலைகாரனை பத்தி எந்த விஷயத்தையும் அவகிட்ட சொல்லாத... முக்கியமா கொலையாளியோட பெயரை சொல்லாத."

"ஆனா ஏன்?" என்றான் குகன் குழப்பத்துடன்.

"காரணத்தை உன்கிட்ட அப்புறம் சொல்றேன்" என்றான் யோசனையுடன்.

"ஏதாவது எமோஷனலான காரணமா?"

"இருக்கலாம்..."

"அதுக்கு என்னால ஏதாவது செய்ய முடியுமா?" என்றான் அதில் ஏதோ இருப்பதாக உணர்ந்த குகன்.

முடியாது என்பது போல தலையசைத்தான் ஸ்ரீராம்.

"சரி, அப்படின்னா வேலாயுதம் பத்தி நீயே அவங்ககிட்ட சொல்லு"

சரி என்று ஸ்ரீராம் தலையசைக்க, அவனை மேலும் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து அகன்றான் குகன்.

வேலாயுதம் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டார். காமராஜ் என்னும் பெயர் கொண்ட ஒரு கைதியால் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்பொழுது புள்ளிகளை இணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஸ்ரீராமுக்கு. காமராஜின் திட்டமிடுதலும், அதை அவர் செயல்படுத்திய முறையும் அவனை வியப்புக்கு உள்ளாக்கியது. வேண்டுமென்றே பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு சிறைச்சாலை சென்றிருக்கிறார் காமராஜ். உண்மையிலேயே, அந்த காமராஜ் தன் மாமனார் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தான் ஸ்ரீராம். அதனால் கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now