78 யார் பணம்?

1.9K 96 13
                                    

78 யார் பணம்?

ஸ்ரீராமும் மிதிலாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி தங்களை மறந்து நின்றார்கள். திடீரென்று ஸ்ரீராமின் அறையின்  கதவு தட்டப்பட, இருவரும் திடுக்கிட்டார்கள். ஸ்ரீராம் கதவைத் திறந்தான். அங்கு மிதிலா இருப்பதை  பார்த்த குகன் கிண்டலாய் சிரிக்க,
தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.

"நான் வேணுமுன்னா போயிட்டு அப்புறம் வரேன்" என்று எகத்தாளமாய் கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்வது போல் பாசாங்கு செய்ய,

"வெயிட் " என்று அவனைத் தடுத்தாள் மிதிலா.

"நான் கிளம்பறேன்" என்று அவள் கூற

"பரவாயில்ல மிதிலா, நீங்க ஏதோ முக்கியமான வேலையில இருக்கிற மாதிரி தெரியுது..." என்றான் அங்கிருந்து செல்வது போல் பாசாங்கு செய்து கொண்டு.

ஸ்ரீராம் எதுவும் கூறுவதற்கு முன்,

"ஷட் அப்... அண்ட் கம் இன்" என்று அவனுக்கு உத்தரவிட்டாள் மிதிலா.

"நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன் மேடம் பாஸ்" என்று தலைவணங்கி கூறினான் குகன்.

அவன் தலையில் லேசாய் ஒரு குட்டு குட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள் மிதிலா. தன் தலையை தேய்த்தபடி சிரித்தான் குகன். அவள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து விட்டு உள்ளே நுழைந்தான்.

"எஸ்ஆர்கே, நம்ம கம்பெனியுடைய டிசைன்ஸ், ஆஸ்திரேலியாவில் நடக்கப் போற ரொம்ப பெரிய பேஷன் ஷோவில் கலந்துக்க செலக்ட் ஆகி இருக்கு" என்றான் உற்சாகமாக.

அதைக் கேட்ட ஸ்ரீராமுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், அவன் எந்த ஃபேஷன் ஷோவுக்காகவும் எந்த டிசைன்ஸையும் அனுப்பி இருக்கவில்லை.

"ஆனா, நம்ம எந்த டிசைன்ஸையும் அனுப்பலயே... "

"மிதிலா அனுப்பியிருந்தாங்க" என்று சிரித்தான் குகன்.

"மிதிலாவா? எந்த டிசைன்ஸ்ஸை அனுப்பினா?" புரியாமல் கேட்டான் ஸ்ரீராம்.

"எல்லாமே உன்னுடைய டிசைன்ஸ் தான்... உன்னுடைய கப்போர்டில் இருந்ததை பாத்துட்டு அனுப்பிட்டாங்க" என்றான் ஸ்ரீராமின் முகத்தை படித்தபடி.

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now