எவ அவ...???

128 24 11
                                    

🔱யின்
💛All in All அழகனின் அழகி இவள்💛

🔱அத்தியாயம் 5️⃣5️⃣

தமிழ் - சொல்லுங்க..... என் தம்பிக்கு திதி தரலைன்னு தான் கவல படுறிங்களா

திரு - தமிழ் இப்ப நான் என்ன கேள்வி கேட்கிறேன் நீங்க என்ன பதில் சொல்றீங்க....இப்போ ஏங்க இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க

தமிழ் - இங்க பாருங்க இதுக்கு மேற்பட்டு நீங்க ஒரே ஒரு வார்த்தை என்கிட்ட பேசனா கூட இங்கே நடக்கிறதே வேற

திரு - ஏங்க நம்ப ரெண்டு பேரும் இயல்பா தான பேசிக்கிட்டு இருக்கோம் இப்ப ஏங்க நீங்க அபசகுனமமா பேசுறீங்க..

தமிழ் - என்னது இயல்பா பேசுறீங்களா.. உங்களுக்கு மண்டையில மசாலா இருக்கா?..இயல்பா பேசுறவரு என்ன மாதிரி வார்த்தை எல்லாம் என்னை கேப்பிங்க..

திரு - நான் என்னங்க உங்கள கேட்டேன்

தமிழ் - என்ன கேட்டீங்களா... இப்படி ஓரமா உக்காந்துகிட்டு அங்க சொம்பு இருக்குல்ல அதை உருட்டிக்கிட்டு நீங்க என்ன என்ன கேள்வி கேட்டீங்கன்னு யோசிச்சு பாருங்க.... ஆனா கடைசியா சொல்றேன் இதுக்குமேல் பட்டு நீங்க ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசவே கூடாது..

தமிழ் கோபமாக மாடியில் இருந்து கீழே இறங்கி செல்ல... திரு தன் தலையில் கை வைத்தவன்....அவன் பேசிய வார்த்தைகளை எண்ணியபடி தலையில் அடித்து கொண்டே..

ஐயோ கோவத்துல என்ன பேசணும்னு தெரிய மாட்டுது.... அட கிறுக்கு பயலே இதுக்கு தான் கோபமே வரக்கூடாதுன்னு நினைக்கிறது....ஆனா தமிழ் விஷயத்துல மட்டும் என்னை மீறி எதையோ பேசி வாங்கி கட்டுகிறதே என் பொழப்பா போச்சு....இருந்தாலும் திரு மத்தவங்க சொல்லும் பொழுது கூட நான் நம்பல... உனக்கு உன் வாய் தான் ஏழரையே... ஐயோ இப்ப மறுபடியும் கோச்சிக்கிட்டு போயிட்டாங்களே.. இவங்கள நான் எப்படி சமாதானப்படுத்துவேன்...டேய் திரு தேவையா இது... அவங்க தான் அவங்க தம்பி மேல உயிரா இருக்காங்கன்னு தெரிஞ்சும் இந்த மாதிரி வார்த்தை எல்லாம் நீ பேசலாமா....உனக்கு வரவர நாக்கில் மட்டும் இல்லடா நாடி நரம்புல எல்லாம் ஏழரை போட்டு ஆட்டி படைக்குது.... போச்சு இந்த கோபம் எத்தனை நாளைக்கு ருத்ர தாண்டவம் ஆடும்ன்னு தெரியலையே.... சரி எவ்வளவோ பாத்துட்டோம் சமாளிப்போம்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now