MY dream Hero

116 22 15
                                    

தமிழ் பேசிய பிறகு அமுதா பாண்டியணை முறைக்க..... பாண்டியன் அமுதாவை கோவமாக பார்த்தவன்

பாண்டியன் - இந்த பொண்ணுக்கு வாய் அதிகம் போல

அமுதா - உங்களுக்கு தான் இப்போ பயம் அதிகமா இருக்கு

பாண்டியன் - என்ன... பயமா...எனக்கு ஏன் பயம்....

அமுதா - ஆமா கொஞ்ச நாளாவே நீங்க இந்த சொத்தை நினைத்து பயப்பட ஆரம்பிச்சிட்டீங்க..

பாண்டியன் - இங்க பாரு எனக்கு இந்த சொத்து சுகத்து மேல யெல்லாம் ஆசை இல்ல.....ஆனா லட்சக்கணக்கான சொத்தை  ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்

அமுதா - அதான் தமிழ் தெளிவா சொல்லிட்டா இல்ல...சொத்து மேல அவளுக்கும் சரி என் தம்பி அழகனுக்கும் சரி கொஞ்சம் கூட ஆசை இல்லைன்னு...இன்னும் உங்களுக்கு என்னதான் வேணும்

பாண்டியன் - சொல்றதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது

அமுதா - நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க....நம்ம இருக்கப் போற இந்த ஒரு வாரத்துல நிம்மதியா இருந்துட்டு நிம்மதியா ஊருக்கு கிளம்பலாம் சும்மா எதையாவது பேசி வச்சு என் தம்பியையோ என் அப்பாவையோ கஷ்டப்படுத்துனீங்க நான் மனுஷியா கூட இருக்க மாட்டேன்

பாண்டியன் - நான் சொல்றத என்னைக்கு தான் நீ கேட்டிருக்க.....விடு உங்க சொத்து உங்களுடைய பொறுப்பு... எனக்கும் அதுக்கும் சம்மந்தமும் இல்ல

அமுதா - அது ஒன்னும் என்னோட சொத்து இல்ல எங்க அப்பா சம்பாதித்தது அதனால அதை பத்தி பேசுறதுக்கு நமக்கு எந்த ரைட்ஸ்ம் இல்ல வாங்க போய் சாப்பிடலாம்

என்று சொன்ன அமுதா பாண்டியனை அழைத்துக் கொண்டு அவள் அறையில் இருந்து வெளியே செல்ல...மேசையில் அனைவருமே இவர்களுக்காக காத்திருக்க

சந்திரன் - வாங்க வாங்க எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது மாப்பிள்ளை வந்து உட்காருங்க அமுதா நீயும் உட்காருமா...செல்வி எங்க தமிழை காணோம்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now