தமிழ்க்கு என்னாச்சு

129 22 16
                                    

🔱All in All அழகனின் அழகி இவள்🔱

🔱அத்தியாயம் 6️⃣2️⃣

தமிழ் - இல்ல பாட்டி நான் பரிகாரம் எல்லாம் பண்ண மாட்டேன்

ரமணி - என்னமா சொல்ற அதான் பணம் கொடுத்து பரிகாரம் பண்ணா வேந்தன் வீட்டுக்கு வரலாம் என்று அந்த ஜோசியக்காரர் சொல்றாரே

தமிழ் - ஆமா பாட்டி ஆனா நான் அதை பண்ண போறது இல்ல

ரமணி - என்னம்மா நீ பேசுறத பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு

தமிழ் - ஏன் என்ன பயம்

ரமணி - குழந்தையை ஏதாவது

தமிழ் - பாட்டி என்ன நீங்க என்னைப்போய் அப்படி தப்பா நினைச்சுட்டீங்க

ரமணி - இல்லமா ஏதோ ஆதங்கத்தில்

தமிழ் - பாட்டி அந்த குறி சொன்னவரு என்ன சொன்னாரு

ரமணி - அதான் சொன்னாரேமா தாய்மாமன் வழியில அந்த பையனுக்கு நேரம் சரியில்ல அதனாலதான் இப்படி எல்லாம் இருக்குன்னு

தமிழ் - ஆமா பாட்டி உண்மைதான் ஆனால் நீங்க ஒன்னு மறந்துட்டீங்க நான் என்னதான் வேந்தனை தம்பியாவோ என் மகனாவோ நினைத்தாலும் அவனுக்கு நான் அம்மாவும் இல்ல சொந்த அக்காவும் இல்ல

ரமணி - என்னம்மா சொல்ற

தமிழ் - அவன் என்னுடைய சித்தி மகன் தானே...அப்படி இருக்கும்போது என் வயிற்றில் வளரும் என் குழந்தைக்கு வேந்தன் தாய் மாமா ஸ்தானத்தில் இருக்கலாமே தவிர தாய்மாமனாக முடியாது

ரமணி - ஆமா இல்லமா நான் இதை சுத்தமா மறந்துட்டேன்

தமிழ் - ஆமா பாட்டி செல்விக்கு கல்யாணம் ஆகி அவளுக்கு குழந்தை பிறக்கிற பட்சத்தில் தான் வேந்தனுக்கு பிரச்சனை எல்லாம் வரும் ஆனால் என் குழந்தையால வேந்தனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஏதோ சொர்ணம் அம்மா சொன்னதும் ஒரு வேள இவங்கள வந்து பார்த்தா என் வேந்தன் எங்க இருக்கிறான்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கான்னு எனக்கு ஒரு ஆசை தோன்றியது... ஆனால் திருவுக்கு இது பிடிக்கல... அவருக்கு பிடிக்கலை என்பதற்காக நான் இதை செய்யாமல் இருந்திருக்கலாம்...ஒருவேளை இந்த குறி பார்த்திருந்தா வேந்தனை கண்டுபிடித்து இருக்கலாமோ என்று ஒரு எண்ணம் என்னை தினமும் தூங்க விடாது அதனால்தான் திருவை எதிர்த்து வந்து இங்க குறி பார்த்துட்டு போறேன்

💚 ALL in ALL அழகனின் அழகி... 💚km Short ஸ்டோரி Where stories live. Discover now