பாகம் -12

362 7 12
                                    

தன் தந்தை இவ்வாறு கூறியதும் நிலா யோசித்தாள்.... நிவியோ" பா... எங்கள ஏன் போக சொல்றிங்க.... வேணும்னா நீயும் அம்மா வும் போய்ட்டு வாங்க.... அந்த வைஷாலிய பாத்தாலே எனக்கு புடிக்காது.... எத்தன தடவ அக்கா வ என ஆரம்பிக்கவும்  நிலா நிவியின் கையை அழுத்தி பிடிக்க அதில் நிவி தன் அக்காவின் முகத்தை பார்த்து விட்டு... பா நீங்க போய்ட்டு வாங்க.... நாங்க போகல  என கூறினாள்...
நிவி மா... நானும் அம்மாவும் நாளைக்கு நம்ம சொந்தகாரங்க ஒருத்தர் கல்யாணத்துக்கு போறோம்.... போய்ட்டு வர ரெண்டு நாள் ஆகும்.... சனி, ஞாயிறு உங்களுக்கு லீவ்  கூட்டிட்டு போகலாம் னு பாத்தா அண்ணா வேலைக்கு போறான்.... அவனுக்கு நீங்க இல்லன்னா ஒரு மாதிரி இருக்கும்.... அதான் உங்கள விட்டுட்டு நானும் அம்மாவும் போறோம்.... ப்ளீஸ் மா... போய்ட்டு வந்துருங்க.... சித்தப்பா போன் பண்ணி சொன்னாங்க.... நிவி, நிலாவையாவது வர சொல்லுங்க னு சொன்னாங்க.... நீங்க போய்ட்டு வந்துருங்க டா செல்லங்களா... ப்ளீஸ்

முடியாது பா என நிவி கூற
சும்மா இரு நிவி.... அப்பா நாங்க போய்ட்டு வரோம்... நீங்க எப்போ கிளம்புறீங்க...நிலா கேட்க
நாளைக்கு மதியம் கெளம்பிருவோம் என கூறி கொண்டிருக்கும் போதே மாறன் வந்தான்....
வா டா கண்ணா சாப்பிடலாம் என தேவி அழைக்க....
கையை கழுவி விட்டு வந்து அமர்ந்து நிலா காலேஜ் ல டான்ஸ் லாம் எப்டி டா.... நல்லா ஆடுனியா என சாதத்தை தட்டில் வைத்து கொண்டே கேக்க
ஆமா ணா.... வழக்கம் போல தெறிக்க விட்டாச்சி என தன் சட்டை காலரை  தூக்கி  கூறினாள்....
அப்புறம் நாடகம் லாம் எப்டி.... ஸ்ருதி பெர்பார்மன்ஸ் எப்டி இருந்திச்சி என மாறன் கேக்க...
அது என்ன அவள மட்டும் ஸ்பெஷலா கேக்குற என தன் அண்ணன் மனதை அறிந்து பொங்கிய சிரிப்பை அடக்கி கொண்டே நிலா கேக்க....
இல்ல.... அது வந்து.... வரிசையா கேக்கலாம் னு தான்  ஸ்ருதி கிட்ட இருந்து ஆரம்பிச்சேன் என மழுப்ப
ம்ம்ம் ம்ம்ம்.... நல்லாவே பண்ணாங்க அந்த மேடம் என சிரித்து கொண்டே கூறினாள் நிலா
மாறனுக்கும் ஸ்ருதிக்கும் நடுவில் ஒரு ட்ரெயின் ஓடுவது மாறன் வீட்டில் அனைவருக்கும் தெரியும்.... இருந்தும் அவனாக சொல்லும் போது சொல்லட்டும் என விட்டு விட்டனர்.....

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now