பாகம் -22

356 4 21
                                    

தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து வெக்கப்பட்ட நிலாவின் தலையில் அப்பொழுது தான் பொறி தட்டியது "அச்சச்சோ அந்த சைக்கோ வீட்டுக்கே வந்துட்டான்.... கீழ வேற எல்லாரும் இருந்துருப்பாங்களே.... என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குதோ என மனதில் பலவாறு யோசித்தவள் பயந்து கொண்டே கீழே செல்ல "இப்படி ஒரு மனிதர் வந்தார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அவர் அவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.... அப்போ அவரு வந்தது என்ன அடிச்சது கிஸ் பண்ணது எல்லாமே கனவா என மண்டையை சொரிந்து கொண்டே யோசித்தாள் நிலா....
இன்னும் எவ்ளோ நேரம் தான் டி சொறிஞ்சிட்டே நிப்ப.... அவ்ளோ பேனா உன் தலையில இருக்கு என தேவி கேக்க

மா.... பேனு லாம் இல்ல மா.... அது வந்து.... ஆமா இவ்ளோ நேரம் நீங்க லாம் வீட்டுல இல்லையா என கேக்க

ஏன் இந்த நேரத்துல எங்க போவாங்க.... வந்து சாப்டுட்டு போய் தூங்கு டி.... நாளைக்கு காலேஜ்க்கு போகணும் என கூற

அப்பொழுது அங்கு வந்த நிவி "தன் அக்காவின் உதடு சிவந்திருப்பதை பார்த்து "என்ன நிலா.... லிப்ஸ்டிக் லாம் போட்ருக்குற என மனதில் சிரிப்பை அடக்கி கொண்டே கேக்க

அதில் பதறிய நிலாவோ.... அது.... அது வந்து.... அது வந்து என சொன்ன வார்த்தையே சொல்லி கொண்டு இருக்க

எது வந்து.... யாரு வந்தாங்க என கேக்க

அதில் இன்னும் பதறிய அவள்.... ஏய் சும்மா இரு டி.... யாரும் வரல.... சும்மா லிப்ஸ்டிக் ட்ரை பண்ணி பாத்தேன் என கூறி "நா ரம்யா அக்காவ கூட்டிட்டு வரேன் என நைஸாக நழுவி சென்றாள்

உள்ளுக்குள் குலுங்கி குலுங்கி சிரித்த நிவி "தன் அக்கா எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என மனதார கடவுளிடம் வேண்டி கொண்டாள்

****************
தன்னவளின் தேன் சுவையை உண்ட தீரன் அந்த மயக்கத்தில் காரில் சென்று கொண்டிருக்க வழியில் சிக்னல் விழுந்தது தெரியாமல் அதை மீறி சென்றான்.... அப்பொழுது அங்கு நின்ற நிலாவின் அண்ணன் மாறன் சாலை விதியை மீறிய அவனை பிடிக்க தன் பைக்கில் விரைந்து சென்றான்....
மனதில் தன்னவள் நெருக்கத்தில் இன்று தான் இருந்ததை நினைத்து கொண்டே காரை ஓட்டிய தீரனுக்கு பின்னால் மாறன் ஹார்ன் அடிப்பதும் "ஹலோ மிஸ்டர் என கூப்பிடுவதும் அவனுக்கு கேக்கவில்லை.... இருப்பினும் வேகமாக பைக்கை ஓட்டி அவன் காரின் முன் நிறுத்தியதில் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்திய தீரனுக்கு தெரியாது தன்னை வழி மறித்து நிற்பது தன்னவளின் அண்ணன் என்று....

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now