50 கையும் களவுமாய்

1.3K 74 14
                                    

50 கையும் களவுமாய்

மறுநாள்

மணிமாறனை விமான நிலையத்தில் விட்ட பின், முதல் நாள் பூங்குழியிடம்  கூறியது போலவே வீட்டிற்கு வரவில்லை மலரவன். கைலாசம் விஷயமாய் முக்கியமான சிலருக்கு அவன் ஃபோன் செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் இருந்தால் அவன் அதை செய்ய முடியாது. அதனால் அலுவலகம் வந்தான். அவனுக்கு முன்னதாகவே மித்திரன் அங்கு வந்துவிட்டிருந்தான்.

"நான் சொன்னதை செஞ்சிட்டியா?" என்றான் மலரவன் மித்திரனிடம்.

"செஞ்சு முடிச்சிட்டேன். எல்லாம் ரெடி. பூபதி சார் செய்ய வேண்டியது மட்டும் தான் பாக்கி" என்றான் மித்திரன்.

"அவர் அதை செஞ்சிடுவார்" என்றான் மலரவன் நம்பிக்கையுடன்.

தன் கைபேசியை எடுத்து தனது வழக்கறிஞரான பூபதிக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை உடனே ஏற்றார் பூபதி.

"நான் ரெடி ஆயிக்கிட்டு இருக்கேன், மலரவன். நம்மளுடையது தான் இன்னைக்கு முதல் கேஸ். கவலைப்படாதீங்க, நீங்க சொன்னதை நான் செஞ்சிடுவேன்" என்றார்.

"ஞாபகம் இருக்கட்டும் பூபதி சார். எதுவும் தப்பா போய்ட கூடாது. ஒன்னு தப்பாச்சின்னா, நம்மளுடைய மொத்த திட்டமும் பாழா போயிடும்"

"எதுவும் தப்பா போகாது. நீங்க உங்களுடைய வேலையை ஆரம்பிக்கலாம்"

"தேங்க்யூ சார்"

மித்திரனுடன் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கி கிளம்பினான் மலரவன். ஒரு மணி நேரத்தில் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட நபரை கைப்பேசியின் மூலம் அழைத்தான் மித்திரன்.

"நாங்க இங்க வந்துட்டோம்" என்றான்.

"இதோ வந்துட்டேன் சார்" என்று அழைப்பை துண்டித்தான் அந்த பக்கம் இருந்தவன்.

சில நிமிடத்தில், அங்கு வந்த ஒரு மனிதன், அவர்களுடைய கார் கண்ணாடியை தட்டினான். அவனுக்கு காரின் கதவை திறந்து விட்டான் மித்திரன். அந்த மனிதன், அவர்கள் காரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now