🌊 அலை 18 🌊

480 13 7
                                    

"அண்ணாத்த, ஒரு முக்கியமான மேட்டரு உன்னாண்ட சொல்லிக்கினு போலாம்னு தான் வந்தேன்…"  மூச்சு வாங்க கரடுமுரடான சென்னை பாஷையில் பேசினான் குமார்.

சாப்பிட்டு கொண்டிருந்த கஜா, “என்ன குமாரு…? என்ன மேட்டரு…? ஏதாவது ஆளு கீளு  கூட்டியாந்து இருக்கியா…? ஏற்கனவே நீ‌ இட்டாந்த ஆளு வாங்கன துட்டுக்கு வட்டிய கட்ட மாட்டுறான்டா….”  என  அலுத்தவன், நல்லி எலும்பை உறிஞ்சிக் கொண்டே, வந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இன்னா அண்ணாத்த… உன் கிட்ட எவன் பேஜார் பண்ணான்னு சொல்லு…? கரெக்டா காசு வர்ற பார்ட்டியை தானே கூட்டிட்டு வரேன்… சரி சரி அத்தவுடு…. அதை விட முக்கியான மேட்டரை தான் இப்போ சொல்ல வந்தேன்… நான் இதை சொன்ன நீ கூட ரொம்ப குஷியாயிடுவ அண்ணாத்த” பீடிகை போட்டான் அவன்.

"நான் குஷியாவுற அளவுக்கு அப்படி‌ என்னடா முக்கியமான மேட்டரு…?" குமாரிடம் கேட்டுக் கொண்டிருந்தவன், “ஏய் இந்தா  இதை எடுத்துட்டு போடி…” உள்ளே வேலையாக இருந்த மனைவியை ஏவியவன் தட்டிலயே கையை கழுவிக் கொண்டு எழுந்தான்.

"அண்ணாத்த உன் அக்கா பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தானே, அந்த டேன்ஸ் ஆடுறவன், அவன ஊருக்கு பேக்கப் பண்ணிட்டாங்க…  அண்ணாத்த… இனி உன் பாடு ஒரே குஜால் தான்…” அவன் பேசிக் கொண்டே செல்ல உள்ளே இருந்து தட்டை எடுக்க வந்த மீனாவை கண்டு குமாரின் பேச்சை நிறுத்தினான் கஜேந்திரன்.

“ஏய் என்னடி இங்க படமா காட்டுறாங்க…? லுக்கு விட்டுக்கிட்டு நிக்குற…? சீ உள்ளே போ…” குமாரின் முன்னயே மனைவியை பேசினான் கஜேந்திரன்.

"இல்லங்க தட்டை தாங்க எடுக்க வந்தேன்… ஆனா நீங்க என்னமோ..." குமாரின் முன்னால் அவள் பேசுவதற்கு தயங்கி நின்றாள்.

"என்னடி… என்ன ஒட்டுக் கேக்குறியா…?  நீ என்ன கேட்டாலும் உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது…" எள்ளலாகவே வந்தது அவன் வார்த்தைகள்… அடுத்தவரின் முன்னால் கணவனே தன்னை கீழாக பேசவும் மீனாவிற்கு தான் கண்கள் கலங்கி விட்டது. 

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now