அலை 🌊 32

267 12 6
                                    

"இன்னைக்கும் வரலையா ரகு"

"இல்ல பாஸ்…"

"ம்… "

"நான் வேணும்னா…?" அவன் தயங்கி நிறுத்த,

"சொல்லு ரகு…" என அவனை ஊக்கினான் கார்த்திக்.

"நான் போன் பண்ணவா பாஸ்…" ரகு வினவியதில்
சிறிது நேர யோசனைக்குப்பின் “பண்ணுங்க… ஸ்ரிக்டா சொல்லு” அவன் சொல்லிய விதத்தில் ரகுவிற்கு புன்னகை அரும்பிட,

"என்ன...?  என்றான் கார்த்திக் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு

"நத்திங் சார்... இதோ கால் பண்றேன்…" என்றவன் ரேவதிக்கு அழைத்தான்.

போன் அடிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தாள் ரேவதி.

எடுப்போமா வேண்டாமா மனம்  இருவேறு யோசனைகளில் இருக்க கார்த்திக்கின் முகம் மனக்கண்ணில் தோன்றியது… கூடவே அவனோடு அன்று இரவு பேசிய வார்த்தைகளும் மனதில் வலம் வந்தது.

திருமணம் நடந்த அன்று இரவு சுஜா அவனை வரச் சொல்வதற்காக வெளியே சென்று விட,

பேரிரைச்சலுடன் சப்தமிட்டு கரையை தொடும் வேகத்துடன் அலைகள் ஒன்றை ஒன்று முட்டி மோதும் சமுத்திரத்தையே இலக்கில்லாமல்  வெறித்துக் கொண்டிருந்தது ரேவதியின் கண்கள்…. 

கார்த்திக்கினை வரச்சொல்லி விட்டலே தவிர, அவனை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற அச்சம் பெண்ணவளை ஆட்டி படைத்தது.

ஒன்றிற்கு இரண்டு முறை அவனிடம் பேசப் போவதை பற்றி மனதில் ஓட்டிக் கொண்டவள்,  அவனுக்காக அறையில் காத்திருந்தாள்.

சுஜா கொடுத்த சுடிதார் அவளுக்கு கச்சிதமாய் பொருந்தி போக ஈரக் கூந்தலை கட்டாமல் விரித்து வைத்திருந்தாள்.

கடல் அலையின் சத்தம் அந்த நிசப்தசத்தை கிழித்துக் கொண்டு மங்கையவளுக்கு  துணையாய் ஆர்பரித்து கொண்டிருக்க, மாது அவளின் எண்ணம் எல்லாம் மாயோனை பற்றியே சுற்றி வந்தது.

அவள் எண்ணத்தின் நயகனே அறைக்குள் வர, கதவை திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தாள் ரேவதி.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now