அலை 🌊 33

449 17 6
                                    

சென்னை விமான நிலையம்…

ஆஸ்திரேலியா செல்லும் விமானம் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட தயாராகின்றது….

சரளமான ஆங்கிலத்தில் ஒலிப்பெருக்கியில் கேட்ட பெண்ணின் குரலில் இருக்கையை விட்டு எழுந்தாள் நிஷா.டிராலியை தங்கையிடம் கொடுத்தவன், 

“போயித்தான் ஆகனுமா நிஷா…  அப்படி உனக்கு ஒரு சேஞ்ஜ் வேணும்னா அம்மா அப்பா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வாயேன்…”

எங்கே வெளிநாட்டில் இருந்து வராமல் நாட்களை கடத்தி விடுவாளோ‌ என்ற தவிப்பில்  மீண்டும் தங்கையிடம் முறையிட்டான் சஞ்ஜய்.

அவனை செல்லமாக முறைத்தவள், 

“என்ன ப்ரோ  பயப்படுறியா” அண்ணனை பார்த்து கண்களை சிமிட்டி அழகாக சிரித்தாள் நிஷா.

“பச் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீ என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்க” அவன் கோபம் கொள்ள,

“ஹேய் ப்ரோ என்ன இது புதுசு புதுசா பேசுறா… கோவப்படுற…  நாம ஏற்கனவே பேசி வைச்சிக்கிட்டது தானே…”  என்றவள், அவன் முகம் இன்னும் தெளியாததை பார்த்து விட்டு,  

“இப்போ தான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன் ப்ரோ…  அங்கேயே இருந்துடுவேன்ற பயம் எல்லாம் வேண்டாம்.. உன் கல்யாணத்துக்கு நிச்சயம் வருவேன் சோ… இப்போ என்னை என் போக்குல விட்டுறு… அம்மா அப்பா கூட இருந்தாலும் ஏதாவது ஒரு பாய்ண்ட்ல மறக்கனும்னு நினைக்கிற விஷயங்களை எல்லாம் பேசிப்பேசியே நியாபகத்துக்கு‌ வர வைச்சிடு வாங்க… என்னோட வொர்க் தான் என்னை நார்மலா வைச்சிக்கும்” என்றாள் அவனுக்கு விளங்கும் படி…

அவனுக்கு புரிந்தது தான்…. இருந்தும், மனவேதனையுடன் செல்கிறாளே என்ற வருத்தம் மனதை வதைக்க, “நிஷா நீ கட்டாயம் மனசை மாத்திக்குவல” ஐயத்துடனே வினவினான் சஞ்ஜய்…

முகம் கொள்ள சிரிப்புடன் அவனை பார்த்தவள், “உனக்கு நான் கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவு தானே…. கண்டிப்பா பண்ணிக்குவேன்… அதுக்கு முன்னாடி, உனக்கு பிறக்கப் போற குட்டிப் பாப்பாக் கூட கொஞ்ச நாள் விளையாடிட்டு, அப்புறம் பண்ணிக்குறனே” என்றாள் அதே மாறாத முறுவலோடு,

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now