யோசிக்க யோசிக்க சுத்தியலை வைத்து மண்டையை உடைப்பது போல தலைவலி அவளை பாடாய் படுத்தியது.
இன்று புதன் கிழமை. திவி சொல்லிய ப்ரோகிராம் நடக்கும் நாள். அவனிடம் எப்படி அனுமதி கேட்பது என்று தான் தெரியவில்லை.
அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு அவனை பார்ப்பதே அரிதாகி இருந்தது. அவளை பார்த்தாலும் பார்க்காததை போல கடந்து விடுபவன், அதிக நேரம் சைட்டில் செலவழிப்பதைப் போல தோன்றியது, தன்னை முற்றிலுமாக தவிர்ப்பதை உணர்ந்தாள் ரேவதி.
ஏற்கனவே முகத்தில் அடிப்பது போல பேசி வந்தாயிற்று, இப்போது அவன் முன்னால் போய் நிற்க வேண்டுமே என நினைத்த மாத்திரத்திலேயே மனம் நெருடியது.
முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை துப்பட்டாவால் ஒற்றி எடுத்தவள் தன் வேலையை பார்த்துக்கொண்டே அவன் அறையை நோட்டம் விட்டாள்…
அவள் பார்ப்பதை இரண்டு மூன்று முறை ரகு கவனித்து இருந்தான். அவன் உள்ளே போவதும் வருவதுமாக இருக்க, அவனிடம் கேட்கலாமா என்று கூட யோசித்தவள் பின் அமைதியாக அமர்ந்து விட்டாள். தவிப்பாக இருந்தது.
ரேவதியின் தவிப்பை கண்டு இருகில் வந்த ரகு,
"என்ன ரேவதி... ரொம்ப நர்வசா இருக்கா மாதிரி இருக்கு... பாஸ் ரூமையே பாக்குறிங்க... என்ன விஷயம்…?” என்றான்.
அவள் வேலைக்கு சேர்ந்த இந்த மூன்று வாரங்களில் ஓரளவு ரகுவிடம் ரேவதி சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தாள்.
"அது வந்து அ… அவர் என்ன மூடில் இருக்காரு ரகுசார்.?" என்றாள் தயங்கிக் கொண்டே,
அவள் கேள்வியின் அர்த்தம் புரியாமல் விழித்தவன்,
" புரியல... என்ன கேக்குறிங்க ரேவதி...?" ரகு அதிர்ந்த பாவனையுடன் அவளை பார்த்தான்…
"அச்சோ... இல்ல இல்ல ரகுசார்" அவசரமாக நெற்றியில் தட்டி கொண்டவள், “கார்த்திக் சார் என்ன மைன்ட் செட்ல இருக்காருன்னு கேட்டேன்…” என்றாள் தெளிவாகவே
YOU ARE READING
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...
Romanceஇது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்