அலை 🌊 31

268 12 10
                                    

சஞ்ஜயின்  கோபத்தின்  அளவைப் போலவே அவனுடைய காரும் தார்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது… 

முன் பக்க சீட்டில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் நிஷாந்தி. அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்ததற்கான தடம் பதிந்திருக்க  உள்ளுக்குள் பல சிந்தனைகள் ஓடிக்கெண்டிருந்தது..…

இரண்டு வருடங்களாய் திருமணமே வேண்டாம் என சுதந்திர பறவையாய்  சுற்றி கொண்டிருந்தவளுக்கு  கார்த்திக்கை கண்ட நொடியில் இருந்து  இதயம் தடம் புரண்டதில் யாரை குற்றம் சொல்வது...

சிறுவயதில் இருந்தே அவள் கேட்டதும் அனைத்தும் கிடைத்து விடும்…  எதற்கும் ஏங்கியது இல்லை… அவளை ஏங்க விட்டதும் இல்லை… செல்லமகள், செல்வ மகள்,  செல்ல தங்கை, இத்தனை பேறும் பெற்று என்ன பலன்…

தன் உள்ளத்தில்,  கணவன் என வரித்துக் கொண்டவனின் செயலில் இதயம் சுக்குநூறாய் உடைந்து  சிதறிப் போய் அல்லவா இருக்கிறாள் …

கலங்கிய தங்கையின் முகம் காண காண தன்னால் ஒன்றும் செய்ய முடியாத கோபத்தில் காரின் ஸ்டியரிங் வீலில் ஓங்கி குத்தி, தன் கோபத்தை காட்டினான் சஞ்ஜய்.

திடிரென்று எழுந்த சத்ததில் கண் விழித்தவள்

"சஞ்சு என்ன பண்ற...?" என்றாள் பதற்றமாக

"நீ சாதரணமா வரலாம் நிஷா என்னால முடியல…." சஞ்ஜய் தங்கையை காணமல் சாலையைப் பார்த்தே பேசினான்…

"சஞ்சு…" தீனமான குரலில்  அழைத்தாள் நிஷா.

சக்தி அத்தனையும் வடிந்ததைப் போல உணர்ந்தவள் அவனை கலங்கிய விழிகளோடு பார்த்தாள்.

"ஏன்  நிஷா கார்த்திக்கை அப்படியே விட்டுட்டு
வரச்சொன்ன… நம்பவச்சு கழுத்து அறுத்தவனை இன்னுமா லவ் பண்ற… உன்னை இப்படி பாக்க பாக்க கார்த்திக் மேல கொலை வெறியே வருது”

தங்கையின் கலங்கிய முகத்தை கண்டு அவளிடம் வெடித்தவனின் கண்கள் கோபத்தில் சிவப்பேறி காணப்பட்டது. அவனை சட்டையைப் பிடித்து கேட்கும் அளவிற்கு ஆத்திரமும் ஆதங்கமும் போட்டிபோட  சோர்ந்து தெரிந்த தங்கையினை பார்த்தான்.

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now