கண்டு💞கொண்டேன் -13
மூவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க....
கதிர் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்..
ஹ்ம்ம் சொல்லுங்க...
அ....து வேலைக்கு போகலாம்னு...
ஏன்?அதுக்குள்ள... இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே..!
ஒரு மாசமா வீட்டுக்குள்ளயே அடைஞ்சி இருக்க..ஒரு மாதிரி இருக்கு கதிர் அதான்..
சரி அப்போ காலையில ரெடியா இருங்க என்னோடவே ஆபீஸ் வந்துருங்க..
சட்டென அங்க வேணாமே கதிர் என்றாள்...
சரி உங்க விருப்பம் என்றான்.. (கோவமாக...)
கதிர்..!! "ப்ளீஸ்" கோவப்படாதீங்க..!! அந்த வீடியோவ எல்லாரும் பார்த்து இருப்பாங்க.. நாம ஒரே இடத்துல இருந்தோம்னா பாக்குறவங்க தப்பு தப்பா யோசிப்பாங்க பேசுவாங்க... அதான்..
இங்க பாருங்க முல்ல💞.. நாம தான் இவன் பேசுவானா? அவன் பேசுவானா? னு நினைச்சிட்டு இருக்கோம்..அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை... இதுல நம்மள எங்கே நியாபகம் வச்சி இருக்க போறாங்க சொல்லுங்க.. இன்னொன்னு என்னோட ஆபீஸ்ல என் கண் பார்வையில பாதுகாப்பா இருப்பிங்கனு நினைச்சேன்..
எனக்கு புரியுது கதிர்... ஆனா இந்த உலகத்தை.. இந்த மனுஷங்கள நான் தனியா face பண்ணனும்னு நினைக்கிறேன்..
ஹ்ம்ம் என்றான்...
( விருப்பம் இல்லாமல்...)(அவள் முகம் சுருங்கியது...)
அத கொஞ்சம் நார்மலா சொல்லலாம்லையா..! இப்டி முகத்தை வச்சிக்கிட்டா நான் எப்டி சந்தோசமா வேலைக்கு போறது..