கண்டு💞கொண்டேன் -23
வீட்டுக்கு வந்து வேகமாக வண்டியை பார்க் செய்தவன்...நான்கு தாவலில் மாடி ஏறினான்... அவள் அறைக்கு செல்ல...அவள் இல்லை என்பதை அறிந்து ஃபோன் செய்தான்...
எங்க இருக்கீங்க முல்ல..!?
வீட்லதான் இருக்கேன்...
ரூம்ல இல்லையே..!
நான் உங்க ரூம்ல இருக்கேன்.. இனி இங்க தான் இருக்க போறேன்...
அங்கு இருந்த கதவு வழியே அவன் அறைக்கு வந்தான்...
சேலையில் புதியதாய் அலங்காரம் செய்து அட்டகாசமாய் இருந்தாள்.. கட்டிலில் தேவதை போல் அமர்ந்து இருந்தவளை கண் கொட்டாமல் பார்த்தான்...
அவன் பார்வையிலேயே அவனின் மனநிலை அவளுக்கு புரிய...
என்னாச்சு இவளுக்கு காலையில ஒரு மாதிரி போனா...இப்போ வேற மாதிரி பேசுறான்னு பாக்குறீங்களா கதிர்..
ஹ்ம்ம் என்றான்..அசையாமல்
இங்கிருந்து போனா உங்கள மறந்துட்டு வாழ முடியுமானு யோசிச்சு பார்த்தேன்.. அது நிச்சயமா முடியாது.. வெளியே போனாலும் இங்க இருந்தாலும் உங்கள மனசுல நினைச்சிட்டு தான் வாழ போறேன்னு தெரிஞ்சதும் திரும்ப வந்துட்டேன்...
சரி நீங்க போய் குளிச்சிட்டு வாங்க... சாப்பிட போலாம்...
முல்ல💞 ப்ளீஸ் நீங்க எனக்காக உங்கள மாத்திக்க வேண்டாம்..
நான் யாருக்காகவும் மாறல...கதிர்
நீங்க போய் first குளிங்க...அப்புறம் பேசலாம் என்றதும்..மௌனமாக பாத்ரூமில் நுழைந்தான்...
குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தனர்... நீங்களே சொல்லுவீங்கனு பார்த்தேன். ஆனா அமைதியாவே இருக்கீங்க என்றான்..