கண்டு💞கொண்டேன் -50
என்ன..டா நடந்துட்டு இருக்கு..!?
முதல்ல இதுங்களை யெல்லாம் கொன்னு கடல்..ல போடறத விட்டுட்டு வச்சு தாலாட்டிகிட்டு இருக்க..அப்பா..!! என்ன? நினைச்சுட்டு இருக்கீங்க.. அவனுங்க கிட்ட நம்ம அம்மா இருக்காங்க..
உன் கல்யாணத்தை மட்டுமே mind ல வச்சிட்டு இவங்கள எல்லாம் கோட்டை விட்றாதே சொல்லிட்டேன்.. அவனுங்க குடும்பத்துனால தான் நம்ம குடும்பம் நாசமா போச்சு...அவன் குடும்பத்து வம்சதுல ஒருத்தர் கூட இருக்க கூடாது..
அதுக்காக அம்மாவுக்கு என்ன ஆனாலும் பரவால்லனு சொல்றிங்களா..!?
என் அம்மா,அப்பா, அண்ணனுக்கு அப்புறம்தான்டா நீங்க எல்லாரும் எனக்கு.. என் குடும்பத்தோட இழப்புக்கு தான் நான் போராடிகிட்டு இருக்கேன்..
உன் கண்ணு முன்னாடியே உன்னோட தம்பி செந்திலுக்கு ஏதாவது ஆச்சுனா உனக்கு எப்படி? இருக்கும்
அ.....ப்....பா..!!
கூட வளராத போதே உனக்கு அவன் மேல அவ்வளவு பாசம் இருக்கும் போது நான், என் அண்ணனோட நகமும் சதையுமா வாழ்ந்தேன் டா எனக்கு எப்படி? இருக்கும்..
நான் நெனச்சது மட்டும் நடக்கலனா.. உன்ன, உன் அம்மா, உன் தம்பினு யாரையும் பாக்க மாட்டே..ன் எல்லாரையும் போட்டு தள்ளிட்டு நானும் தற்கொலை பண்ணிப்பேன்..
டாடி Emotional ஆகாதீங்க.. நாளைக்கு காலைல எனக்கும் சித்ராவுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் கதிர் முல்லை கதைய உங்க கண்ணு முன்னாடியே முடிக்கிறேன்..
அதிகாலை 3 மணி..
கதிரும் குமரனும் கலைவாணியோடு ஒரு சிறிய கப்பலில் சென்று கொண்டிருந்தனர்..