கண்டு💞கொண்டேன் -30
முல்லை💞 சித்ராவிடம் சொல்லி விட்டாளே தவிர.. மனதில் எப்படி இதை சரி செய்ய போகிறோம் என்ற கவலையில் இருக்க.. தன் வயிற்றை தொட்டு பார்த்தாள்.. குட்டிமா..! என்ன பண்றிங்க... அம்மா நினைக்கிறது எல்லாம் நடக்குமா செல்லம்..
அம்மாவின் குரல் கேட்டதால் என்னவோ அது லேசாக உந்தியது..
குட்டி நீங்க பாப்பா வா...?? தம்பியா..?? யாரா இருந்தாலும் உங்கள பாக்க அம்மா ஆசையா இருக்கேன்....உன்னையும் என்னையும் அம்மாச்சியோட சொந்தம் எல்லாம் ஏத்துப்பாங்களானு தெரியலயே...
அவங்கள பாக்குறதுக்கு முன்னாடி அம்மா உனக்கான அங்கீகாரத்த வாங்கிடுவேன்... ஆனாலும் நீ ரொம்ப மோசம்டா உங்க அப்பா முத்தம் கொடுத்ததும் ரொம்ப நல்ல புள்ளையா அமைதியா இருக்க.. நீங்க அப்பா செல்லம்மா.. அம்மா பேச்ச கேட்க மாட்டிங்களா..! என்று குழந்தையை கொஞ்சி கொண்டே... அவளுக்கு கஸ்தூரி நியாபகம் வர ...இங்க தானே அவங்க அம்மாவ அட்மிட் பண்ணி இருக்குறதா சொன்னாங்க போய் பாக்கலாமா..? என்று எழுந்தவள்.. எந்த ரூம் நம்பர்னு தெரியலயே என்று யோசனை செய்தவாறு அறையை விட்டு வெளியே வர...
அங்கு இவளை பரிசோதித்த நர்ஸ் கடந்து போக... அவளை அழைத்தவள் சிஸ்டர் என்னோட இங்க கஸ்தூரினு ஒரு அக்கா இருந்தாங்களே.. அவங்க அம்மா எந்த ரூம்ல அட்மிட் ஆகிருக்காங்கனு தெரியுமா..?
நேரா போய் right சைடு last ரூம் என சொல்லி நர்ஸ் வேகமாக நடக்க...
முல்லை💞 அந்த அறையை நோக்கி..
சென்றாள்..அறையில் கஸ்தூரியும் அவர் அம்மாவும் சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர்..