கண்டுகொண்டேன் -19

372 45 14
                                    

கண்டு💞கொண்டேன்-19

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.

கண்டு💞கொண்டேன்-19

காரை இயக்கி கொண்டிருந்தவனை விழிகளால் பருகி கொண்டிருந்தாள்...

White Shirt ல் மேல் பட்டனுக்கு விடுதலை கொடுத்திருந்தான்.. காற்றின் வேகத்தில் தலைமுடி அசைய...மீசை,தாடி... என ஒவ்வொன்றையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தாள்..

ஹ்ம்ம்.. பார்த்தவுடன் எவருக்கும் பிடிக்கும் முகமும் கண்களும் கொண்டவர் தான்... அதனால் தான் அந்த பெண்ணிற்கு இவரை பிடித்திருக்கும் போல...

என்ன? முல்ல💞 ஏதாவது சொல்லணுமா..? பார்த்துட்டே இருக்கீங்க...

ஸ்ஸ்... அவனே கேட்கும் அளவிற்கா அவனை பார்த்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து பதறி... ஒண்ணும் இல்ல.. என்று பார்வையை வெளியே திருப்பினாள்...

வேலை அதிகமோ...!??

இல்ல கதிர்..

Tired ஆகி தூங்கிட்டிங்களே அதான் கேட்டேன்...

தெரியல கதிர் சும்மா படுத்தேன்... எப்டி தூங்கினேன்னு தெரியல...

ஹ்ம்ம் படுத்ததும் தூங்குறது எல்லாம் ஒரு வரம் தான்...

ஏன்? கதிர் உங்களுக்கு படுத்ததும் தூக்கம் வராதா..!?

ம்ஹூம் புரண்டு புரண்டு... காலையில 4 -4:30 ஆகிடும் தூங்க.. அது கூட தானா வராது.... ரூம்லயே கால் வலிக்க நடந்துட்டே இருப்பேன்... அந்த வலியில தான் தூங்குவேன்..

(சில நொடி அமைதியானவன்....) கடைசியா எப்போ நல்லா தூங்கினேன்னு எனக்கே நியாபகம் இல்ல முல்ல💞.. என்றவன் எதையோ நினைத்து வருந்தினான்...

கண்டுகொண்டேன் Tempat cerita menjadi hidup. Temukan sekarang