கண்டு💞கொண்டேன் -17
கஸ்தூரி எதற்கு ரகசியமா போகணும் என்ற யோசனையில் முல்லை💞 சுவற்றின் பின் இருந்து எட்டி பார்க்க..கஸ்தூரி வீட்டின் பின் பக்கத்தை நோக்கி நடந்தாள்...
இன்னைக்கு எப்படியும் இது என்ன? விஷயம்..ன்றத பார்த்திடணும் என்ற ஆர்வத்தில் அவர்களை பின் தொடர்ந்தாள்...
கஸ்தூரி வீட்டின் பின் பக்கம் உள்ள தகர சீட்டின் கதவை சாவி கொண்டு திறந்தாள்...
உள்ளே கஸ்தூரியும்.. தோட்டகாரனும் வரிசையான வேலையாட்கள் தங்கும் இருப்பிடத்தை தாண்டி.. அந்த கெஸ்ட் ஹவுஸின் பின் பக்கம் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்த லேசா இருட்டான பகுதிக்கு நடந்து சென்றனர்...
இது என்ன? அலிபாபா குகை போல போய்கிட்டே இருக்கு என்று நினைத்தவள்...இருட்டின் மறைவில் பதுங்கி பதுங்கி நடந்தாள்.. கால்களில் ஏதோ குத்தி காயப்படுத்த சத்தம் போட்டு விட போகிறோம் என்ற பயத்தில் தன் வாயை கைகளால் அழுத்தி கொண்டாள்...
ஒரு இடத்தில் கஸ்தூரி நிற்க.. அங்கே இரும்பால் செய்ய பட்ட சிறை போலவே ஒரு அறை இருந்தது அங்கு ஒருவனை அடைத்து வைத்திருந்தனர்.. அவனுக்கு கஸ்தூரி தட்டில் சாப்பாடு வைத்து கொடுக்க...
அவன், அக்கா கதிர் Sir கிட்ட சொல்லி என்னை விட்டுட சொல்லுங்க..க்கா.. ப்ளீஸ்..
வீடியோ எடுக்க சொன்னது யாருனு நீ சொல்லிட்டா உடனே விட்டுடுவாங்க ப்பா..
அப்போது தான் முல்லை💞க்கு புரிந்தது.. வீடியோ எடுக்க சொன்னது யார் என கண்டுபிடிக்க இவனை இங்கே அடைத்து வைத்திருக்கின்றர் என்று...