கண்டுகொண்டேன் -52

355 38 15
                                    

கண்டு💞கொண்டேன் -52

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கண்டு💞கொண்டேன் -52

வலியில் அலறி விழுந்த...
முல்லை💞யை பார்த்து துடித்து போனவன்..  விக்ரமை நோக்கி பாய்ந்து வெறி கொண்ட மட்டும்  அடித்தான் கதிர்..

அடித்ததில் மூக்கு சில் உடைந்து.. உதடு கிழிந்து ரத்தம் குபுக் என கொட்ட அப்போதும் ஆத்திரம் தீராதவன்.. அருகே தேடியதில் கூர்மையான கம்பி ஒன்று கையில் சிக்க அதை எடுத்து கொண்டு அவனை குத்த நெருங்க..

வேண்டாம் கதிர்..!! என்று
லக்ஷ்மி காலில் விழுந்தார்..

தடுக்காதீங்க விடுங்க..

ப்ளீஸ் கதிர்.. நான் ஒருத்தனை கொன்னதே போதும்... பண்ண பாவத்துக்கு அவனே அனுபவிச்சுப்பான் விட்ரு.. இனியாவது நம்ம குடும்பம் நல்லபடியா இருக்கணும்..

அவனை கொல்லாம விட கூடாது..ம்மா..!!

கொலை என்னைக்கும் தீர்வாகாது கதிர்.. தயவு செய்து நீ முல்லை💞ய போய் பாரு..

கையில் வைத்திருந்ததை எறிந்தவன்.. பதறி கொண்டு முல்லையின் அருகில் போய் அவளின் தலையை தன் மடியில் கிடத்தி ஒண்ணும் இல்ல முல்ல.. என்று சமாதானம் சொன்னான்..

அவனின் முன்பு அழுதால் அவன் எங்கே பதறி போவானோ.!? என்று அஞ்சியவள்..  அழ கூடாது என்று கட்டுப்படுத்தியும்... வலி மேலும் மேலும் அதிகரித்ததில் அவளின் அழுகையை அவளால் கட்டப்படுத்த முடியாமல் போனது..

விக்ரம் கன்னத்தில் மாறி மாறி கலைவாணி அறைந்தார்..

ஏன்?டா இப்படி இருக்க.. சின்ன வயசுல இருந்து வெறுத்த அவனோட அம்மா பேச்ச ஒரு நிமிஷம் தாமதிக்காம அவன் கேட்கிறான்..

கண்டுகொண்டேன் Where stories live. Discover now