கண்டு💞கொண்டேன்-47
சித்ரா,
ஏன்? இவ்ளோ வேகமா வண்டி ஓட்றிங்க..சும்மா தான்..
ஏன்? ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.!?
ஒண்ணும் இல்ல கொஞ்ச நேரம் அமைதியா வா..!
என்ன பிரச்சனைனு தெரியலயே!? என்று மனதில் நினைத்து கொண்டவள் அமைதியானாள்..
விக்ரமின் மொபைல் ஒலிக்க எடுத்தான்..
சொல்லுங்க டாடி..
(குமரன் இருக்கும் இடத்தை சொல்ல...)
அவனின் முகம் தீயாய் எரிந்து.. வண்டி இன்னும் வேகமெடுத்தது..
அந்த mega mall பார்க்கிங்ல் தன் காரை நிறுத்தினான்..மேல போய் Purchase பண்ணிட்டே இரு.. உனக்கு என்ன? வேணுமோ வாங்கிக்க.. ஒரே ஒரு ஃபோன் மட்டும் பேசிட்டு வரேன்..
ஹ்ம்ம் என்றவள்.. ஏங்க வர்ற அவசரத்துல போன மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.. முடிச்சிட்டு உங்கள எப்டி? கூப்புட்றது..
சின்ன வேலை தான்.. நீ செலக்ட் பண்ணிட்டே இரு.. நான் சீக்கிரம் வந்துடறேன்..
சரி.. ஆனா வரும்போது ப்ளீஸ் டென்ஷன் இல்லாம வாங்க.. என்று உள்ளே நடந்தாள்..
(காரிலிருந்து இறங்கியவன்..)
டேய் குமரா..!! என் அம்மா மேலயா கை வைக்கிற.. இந்த விக்ரம் கிட்ட வச்சிக்கிட்டா அவனோட சந்ததி கூட நாளைக்கு இல்லாத அளவுக்கு உருத்தெரியாம அழிப்பேன்..டா என்று கர்ஜித்தவன்..செல்ஃபோன் எடுத்து தன் ஆட்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் வருகைக்கு காத்திருந்தான்..
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஆடிட்டருக்கு call செய்த கதிர்..