கலாட்டா 1

1.9K 88 20
                                    

வாழையடி வாழையாக வாழ வேண்டுமென நம் முன்னோர்கள் அக்காலத்தில் அமைத்துக்கொடுத்த சில சம்பிரதாயங்களை நம் மக்கள் இன்னும் விடாமல் கடைபிடிக்கிறார்கள் என்பதற்கு சான்றாக அந்த வீட்டின் முகப்பில் இரண்டு வாழைமரங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறு கட்டப்பட்டிருந்தது.

மாந்தோரணம், மஞ்சள், சிவப்பு,வெள்ளை,ஊதா என பல நிறங்களைக் கொண்ட பூக்களால் அவ்வீடெங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அந்த வண்ணப் பூக்கள், எல்லா நிறத்திலும் அழகு உண்டு என அனைவருக்கும் எடுத்துரைக்கும் வண்ணமாக அமைந்திருந்தாலும் பார்வதியின் அம்மாவின் மூளைக்கு அது எப்போதும் எட்டாது.

"அடியே, என்னடி பவுடர் போட்டிருக்கிங்க, அவ பார்க்க சிவப்பாவே இல்ல பாருங்க, இன்னும் கொஞ்சம் எடுத்து பூசுங்கடி" என பார்வதிக்கு அலங்காரம் செய்திருந்தவர்களை பார்த்து அதட்டிவிட்டு சென்றாள் பார்வதியின் அம்மா பரிமளம்.

"அக்கா இன்னும் கொஞ்சம் பவுடர் போடுறேன், இல்லையினா இந்த அம்மா என்ன சும்மா விடாது, ப்ளீஸ் அக்கா" என கெஞ்சியவளாய் மேலும் சற்று பவுடர் போட்டுவிட்டாள் பவித்ரா.

நிறத்தில் பார்வதியை விட பவித்ரா சற்று சிவப்பு என்பதால்  பவித்ராவைவிட பார்வதியின் மேல் பரிமளத்திற்கு எப்போதும் சற்று கவனம் அதிகம், அவளை நல்ல பையனிடம் ஒப்படைக்கும் வரை பரிமளத்தின் கால் பூமியில் நிற்காது.

ஒரு விசேஷம் என்றால் அங்கும் இங்குமாய் அலைந்து அனைத்து வேலைகளையும் தன் தலை மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது என்பது அக்கால பெண்களுக்கு தனி கெத்து, அதனை அப்படியே மெயின்ட்டெயின் பண்ணணும் என்பதில் பரிமளம் சரியாக இருப்பாள்.

"டேய் சின்னவனே மணி எட்டு ஆக போகுது டா, டவுன் பஸ் வந்துடும், போயிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள அழைச்சிட்டு வா டா" என குரல் கொடுத்துக்கொண்டே பக்கத்து வீட்டின் வாயிலில் நுழைந்தாள் பரிமளம்.

"இதோ கிளம்பிடறேன் அம்மா" என குரல் கொடுத்துக்கொண்டே சட்டையை மாட்டினான் மணி.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now