கலாட்டா 16

621 62 21
                                    

"மாம்ஸ்....நீங்க வேற லெவல், எல்லாம் ப்ளான் பண்ணிட்டு வந்துட்டு, இவ்வளவு நேரம் அமைதியா இருந்திருக்கிங்க, பாவம் சக்தி அத்தை, வாலண்டரியா வந்து டேமேஸ் ஆகிட்டாங்க" என்றாள் பவி.

"அடிப்பாவி அப்போ என்னைப் பார்த்து ப்ளேபாய் லெவலுக்கு உன் அத்தை பேசினாங்க, நான் பாவம் இல்லையா?" என அப்பாவி முகத்துடன் கேட்டான் சிவா.

"சாரி மாம்ஸ் சும்மா தான் அப்படி சொன்னேன், நீங்க சூப்பர் மாமா, அக்கா கொடுத்து வச்சவ, உங்களுக்கு ஒரு தம்பி இருந்திருந்தா என் ரூட்டும் கிளியர் ஆகிருக்கும், பட் மை டைம் நீங்க ஒரே புள்ளயா போயிட்டிங்க" என்ற பவியை பார்த்து கண்ணடித்த சிவா, "பவி, நீ கவலைப்படாத, நானே உன்னையும் கல்யாணம் பண்ணிக்குறேன்" என்றான் நக்கலாக. "அட ஆசையப்பாரு, முதல்ல என் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சமாளிக்க முடியுதானு பாருக்க" என அவளும் சிவாவை வம்புக்கு இழுத்தாள்.

இவர்களின் கலகலப்புப் பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை, சூரியன் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க மேற்கு நோக்கி நகர்ந்தது.

"தம்பி, இந்தாங்க " என காப்பி டம்ளரை நீட்டினாள் பரிமளம். "அய்யய்யோ நேரம் போனதே தெரியாம அரட்டை அடிச்சிட்டு இருக்கோம்" என கூறி மடமடவென காப்பி குடித்துவிட்டு, "அத்தை காப்பி டேஸ்ட் சூப்பர்" என பரிமளத்தின் மனம் குளுரும்படி ஒரு சர்டிபிகேட் வழங்கிவிட்டு,  அனைவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சிவா.

சிவா சென்றப்பின் வீடே அமைதியாக இருந்தது. "அம்மா மாம்ஸ் இருந்த வர எப்படி கலகலப்பா இருந்தது பத்தியா வீடு" என்றாள் பவி. "ஆமாம் பவி, தம்பி ரொம்ப நல்ல குணம் கொண்ட புள்ள" என்றாள் பரிமளம்.

"ம்ம்.. எனக்கும் இப்படித் தான் மாப்பிள்ளை பார்க்கனும் புரியுதா? " என்றாள் பவி.
"இன்னும் காலேஜே முடிக்கல அதுக்குள்ள மாப்பிள்ளை பத்தி பேசுது பாரு கழுதை, போ போயிட்டு ஒழுங்கா படிக்கிற வழியப்பாரு" என அவளை துரத்திவிட்டாள் பரிமளம்.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Tempat cerita menjadi hidup. Temukan sekarang