கலாட்டா 8

649 77 24
                                    

வீடெங்கும் சலசலப்பிற்கும் சப்தத்திற்கும் பஞ்சமே இல்லை, உணவு முடிந்ததும் கிராமத்தில் திண்ணைப் பேச்சி என்பது வழக்ககத்தில் இருக்கும் ஒன்று தானே, ஆண்கள் எல்லாம் வீட்டின் முகப்பில் இருபுறமும் இருந்த திண்ணையில்  அவரவர் தங்களுக்கு ஏற்ற இடத்தை பிடித்து சவுகரியமாக அமர்ந்தனர். வீட்டில் காலியாக இருந்த அறையில் பெண்கள் அவர்களின் வசதிக்கேற்ப, சுவரில் சாய்ந்தும் கால் நீட்டியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். சிவாவின் மனம் என்னவோ அவனின் தர்மப்பத்தினி இருக்கும் இடத்தையே சுற்றிக்கொண்டு இருந்தது. அவளின் வீட்டினர் எவரும் இன்னும் உணவு உண்ணவில்லை என்ற எண்ணம் சிவாவிற்கு மட்டுமே உருத்திக்கொண்டு இருந்தது. திண்ணையில் இருந்த பெரியவர்கள் "வெத்தலை பாக்கு எங்கம்மா?? "என குரலெழுப்ப, "இதோ கொண்டுவரேணுங்க தாத்தா" என உள்ளிருந்து குரல்கொடுத்தபடியே வெளியே ஓடி வந்தாள் பார்வதி. அந்த தட்டை அவளிடமிருந்து வாங்க எதிரே வந்தான்  சிவா, அவனைப் பார்க்காமல் தட்டின் மீதே கவனங்கொண்டு வந்த பார்வதி, அவளின் வழி தடைப்பட்டுள்ளதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். ஏன்னங்க விசயம்? என்பதைப்போல தன் கண் அசைவினாள் கேட்க, "தட்டை எங்கிட்ட கொடு,  நீங்க எல்லோரும் போயிட்டு சாப்பிடுங்க"  என்றதும் பார்வதியின் முகத்தில் சிறு புன்னகை, அப்பப்பா இவ்வளவு அக்கரை கொண்டு என்னை நிழல் போல் சுற்றினால் என்னத்தான் செய்யும் இந்த நங்கையின் உள்ளம், ஏற்கனவே காந்தப்பிடியில் அகப்பட்ட இறும்புத்துண்டு போல எப்பவும் அவர் நினைவு தான், இதில் இவர் வேற அடிக்கடி வந்து தன் திருமுகத்தைக் காண்டி என்னை நாணத்தில் மிதக்கவிடுகிறாரே" என தன் மனதிற்குள் முனகிக்கொண்டே அவனிடம் தட்டை நீட்ட,"அவளின் மென்மையான கரத்தின் மேல் அவனின் கைப்பட, அதனை சற்றும் எதிர்பாராத பார்வதி, மின்சாரம் தாக்கியதேப் போல சட்டென தன் கையை விலக்கினாள், அவளின் நாணத்தை ரசித்துக்கொண்டிருந்தவன் தட்டைப்பிடிக்காமல் விட்டதால்  'படார்...' என தட்டு  கீழே விழுந்து தரையையே மிரட்டும் அளவிற்கு சப்தம் எழுப்பியது. அனைவரும் இவர்களின் திசை நோக்கி திரும்பி பார்க்க, அங்கே வலப்பக்கம் இருந்த அறைக்குள் நுழைந்து தன்னை மறைத்துக்கொண்டான் சிவா.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now