கலாட்டா 3

823 78 31
                                    

"என்னடா, பேசியாச்சா இல்ல இன்னும் எதாவது பேலன்ஸ் இருக்கா??" என சிவாவின் அம்மா கேட்க, " அட நீ வேற அம்மா, பார்வதி வாய திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, புடிச்சிருந்தா தலையவாச்சும் அசைனு கொஞ்சி கேட்டு பதில தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கேன்" என சிவா கூற அங்கிருத்த அனைவரும் சிரித்தனர்.

"அடேய் மடையா, இது என்ன டவுனா?? டக்கு டக்குன்னு பொண்ணுங்க பேசி பழகுறதுக்கு, இது கிராமம் சிவா, பார்வதி இங்கயே வளர்ந்த பொண்ணு, அதான் முதல் தடவ பேச கூச்சப்பட்டிருக்கும்" என்றாள் சிவாவின் அம்மா சரசு.

"அட ஆமாம் இல்ல, உங்கள சங்கடப்படுத்தினதுக்கு சாரிங்க" என பார்வதியை பார்த்து சிவா கூற, "ஐய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லை" என பதில் கூறினாள் பார்வதி.

"தம்பி, இந்த சின்ன வியத்துக்கு கூட தயங்காம மன்னிப்பு கேட்குற உங்க நல்ல குணம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என சுப்பையா கூற, பரிமளமும் சிரித்தவண்ணம் சுப்பையா உடன் சேர்ந்து "ஆமாங்க அண்ணி, தம்பிய எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள்.

"பிறகு என்ன, தட்ட மாத்திக்க வேண்டியது தானே பாக்கி" என அலமு பாட்டி கூற, "ஆமாம் பாட்டி, இன்னும் பத்து நிமிசத்துல சுப முகூர்த்த நேரம் அப்போ தட்ட மாத்திக்கலாம்" என்றாள் சரசு.

"ரொம்ப சந்தோசம் அண்ணி" என கூறிவிட்டு ஒரமாக நின்றாள் பரிமளம்.
அப்போது அங்கே இருந்த பார்வதியின் அத்தை சக்தி, " அண்ணே வந்தவங்களுக்கு காப்பி மட்டும் கொடுத்துட்டு அதோட நிறுத்திட்டீங்க, பலகாரம் எதும் கொடுக்கலையா?? இல்ல எப்பவும் போல இவங்களும் வந்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுவாங்கனு பலகாரம் ஏதும் வீட்டில வாங்கி வைக்கலையா?" என கேட்க, அனைவரும் அதிர்ச்சியில் பேசாமல் இருந்தனர், "அடியே லூசு உன்ன இப்போ யாராச்சும் பேச சொன்னாங்கலா?? வாய மூடிக்கிட்டு ஓரமா நில்லு" என அவளை மிரட்டினான் அவளின் கணவர்.

"மன்னிச்சிடுங்க , சக்தி அப்படித்தான் ஒரு விசயத்தை எப்படி சொல்லுரதுனு தெரியாம எதையாவது ஒலருவா" என சக்தியின் கணவர் கூற, "பரிமளம், போயிட்டு வந்தவங்களுக்கு பலகாரம் கொண்டு வாம்மா " என்றார் சுப்பையா.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now