கலாட்டா 13

635 76 30
                                    

பார்வதியின் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தான் ஆனந்த், அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றாலும் ரிங் கொடுத்தே டார்ச்சர் செய்தான், அவனின் எண்ணை ப்ளாக் செய்தாலும் வேறு நம்பரில் இருந்து அழைப்பது,  பார்வதிக்கு இவனின் தொல்லை மெல்லவும் முடியாமல் முழுக்கவும் முடியாத நிலை என்பது போல இருந்தது, வீட்டில் இதனை கூறினால் தேவை இல்லாத பிரச்சனை எழும் என்பதால் சற்று பொறுமையுடன் நடக்க வேண்டுமென தீர்மானித்தாள்.

காலைப்பொழுதில் சேவல் கூவுகிறதோ இல்லையோ, ஆனந்தின் அழைப்பு பார்வதியின் நித்திரையை கலைத்துவிடும்.

எப்போதும் எடுக்காத போனை இன்று எடுத்து பேசினாள், "ஹோலோ.." என்ற பார்வதியின் குரலுக்கு மறுமுனையில் இருக்கும் ஆனந்திற்கு பேச வார்த்தை வரவில்லை, "ஏய் பார்வதி, நீ எப்படியும் ஒருநாள்  என் போன் கால் எடுப்பனு தெரியும் அதான் தினமும் உனக்கு ட்ரை பண்ணேன்" என்றவனின் வார்த்தையை சற்றும் மதிக்காமல், "எதுக்கு என்னை டார்ச்சர் கொடுக்குற?  உனக்கு என்ன வேண்டும்? சீக்கிரம் சொல்லி முடி எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள்.

"எப்படி உன்கிட்ட சொல்வது என தெரியாமல் தான் உனக்கு நிச்சயம் பேசியிருக்காங்கனு தெரிஞ்சதும் இங்க ஓடி வந்துட்டேன், நீ அன்னைக்கு கோயிலில் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் உண்மை, நான் உன்னை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டேன், சத்தியமா எனக்கு நிறம் முக்கியமில்லை, உனக்கே தெரியும் கேலிக்காக தான் உன்னை கருப்பினு கூப்பிடுவேன், மத்தப்படி நான் எப்போதாவது உன் மனசு நோகும்படி நிறத்தை காரணம் காட்டி பேசியிக்கேனா???, அன்று அம்மா பேச்சை எதிர்த்து பேச முடியல,  உனக்கு உண்மையில் இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கா என்று தெரிந்துக்கொள்ள தான் வந்த அன்னைக்கே உன் வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்த்துக்கள் சொல்லி உன் மனநிலையை தெரிந்துக்கொள்ள நினைத்தேன், நீ தான் என்ன பேசவிடாம ஒரு அர விட்ட, இப்போ கூட எனக்கு உன்ன தான் பிடித்திருக்கு பார்வதி" என ஆனந்த் பேசிக்கொண்டே இருக்க, "வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட் ஆனந்த்,  என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு, இனி இப்படி லூசுத்தனமா பேசுரதுக்கு எல்லாம்  எனக்கு போன் பண்ணாத, நான் அன்னைக்கு சொன்னது தான், உனக்கு எனக்கும் எந்த உறவும் இல்லை, நட்புக்கூட இல்லை, தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாத, இனிமே என் நம்பருக்கு ட்ரை கூட பண்ணாத அதான் நீ எனக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்" என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now