கலாட்டா 11

675 73 23
                                    

"எனக்கு பிடிக்கலனா நீங்க வீட்டில கேட்கும் போதே சொல்லிருப்பேனே, இன்னும் நான் என்ன சொல்லனும்னு 
நீங்க எதிர்பாக்கரிங்க?" என்றாள் பார்வதி.

"ஐய்யய்யோ கண்டுபிடிச்சிட்டாளே, இவ வாயில இருந்து பிடித்திருக்கு, ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கவேண்டுமென பார்த்தால், முடியாது போலிருக்கே" என மனதிற்குள் எண்ணிக் கொண்டு சற்று வெறுமையுடன், "சரிங்க மேடம், நான் போனை வைக்குறேன்" என்றான்.

வைக்காதே மடையா, உன்னுடைய வார்த்தைகளுக்காகத்தான் செவி ஏங்கிக்கொண்டு இருக்கிறது, உன்னுடைய குரலை கேட்டால் என் மூளையும் சற்றே மங்கித்தான் போய்விடுகிறது, உனது சிரிப்பென்னும் அலையில்  எனது மனம் ஒய்யாரமாக ஏறி படகு சவாரி செய்கிறது, இதையெல்லாம் நான் எவ்வாறு உன்னிடம் உறைப்பது, பெண்களுக்கு மட்டுமே உரிதான நாணம் என்னை போட்டு வதைக்கிறது.
வார்த்தைகள் யாவும் வாய்வரை வந்து நிற்க, அவற்றை வெளியே விடாமல் தடுப்புச்சுவராய் தடுத்து நிறுத்தி இருக்கிறது என் உதடுகள். என் மனம் புரியுமாயின் நீ உன் அழைப்பை துண்டிக்கமாட்டாய், என்ற பார்வதியின் மன எண்ணங்கள் புரிந்ததோ இல்லையோ, அவள் இன்னும் சற்று நேரம் தன்னுடன் பேச நினைக்கிறாள் என்பதை மட்டும் சரியாக புரிந்துக்கொண்டு அழைப்பை துண்டிக்காமல் அமைதியாகவே போனை காதில் வைத்திருந்தான் சிவா.

"இன்னும் எவ்வளவு நேரம் அமைதியா ரிசிவரை காதில் வைத்திருக்கபோகிறாய் பார்வதி" என்ற சிவாவின் குரலைக்கேட்டப் பின்பு தான் பார்வதி நன்னிலையையே உணர்ந்தாள்.

"அடக்கடவுளே,  சாரிங்க நீங்க போனை வச்சிட்டு இருப்பிங்கனு நினைத்துதான்...." என பார்வதி இழுக்க, "நினைத்துதான் கனவு உலகுக்கு கிளம்பிட்டியோ" என சிவா கிண்டலடிக்க,  பார்வதி வெட்கத்தால் தலைகுனிந்தாள்.

"சரி, கொஞ்சம் வேலை இருக்கு, நாளைக்கு பேசுரேன்"  என்று கூறிவிட்டு சிவா போனை வைக்க, பார்வதியின் மனமோ ரெக்கை கட்டி பறந்தது.

தனது துணையாகப்போகிறவளின் விருப்பத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவன் தன் கணவனாக போகிறான் என்ற எண்ணமே பார்வதியை மேலும் மகிழ்ச்சியடைய வைத்தது.

💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle)Where stories live. Discover now