அறிமுகம் :

322 38 96
                                    

இந்த உலகம் மிகவும் வித்தியாசமான உலகம் என்று சொல்வதை விட மாயங்கள் நிறைந்த மாய உலகம் என்று சொல்வதே உண்மையாகும். ஏனென்றால், இந்த மாய உலகில் வாழும் மக்கள் யாவரும் துன்பம் என்றால் என்ன என கேட்பார்கள், அந்தளவுக்கு சந்தோஷம் மட்டுமே நிறைந்த உலகம் இது...

இங்கு வாழும் மக்கள் யாவரும் பார்ப்பதற்கு மானிடர்கள் போன்று தோற்றமளித்தாலும், அரசர் குலத்தில் பிறந்தவர்கள் மட்டும் முதுகில் இறக்கைகளுடன் தேவதைகள் போன்று தோற்றமளிப்பர்...

இவர்கள் சாதரணமாகவே அழகு நிறைந்தவர்கள், அதிலும் அவர்களின் இறக்கைகளுடன் தோற்றமளிக்கும்போது மிகவும் அழகாக, பார்போரின் விழிகள் அவர்களை விட்டு அகலாமல் தொடர்ந்து பார்க்க எண்ணம் தூண்டும் அளவிற்கு அழகாக காட்சியளிப்பர். அதிலும் அரசகுலத்தில் பிறந்த மங்கையர் என்றால் தனி அழகு...

மன்னர் குருசில் அவர்களுக்கும், அருளாசினி அவர்களுக்கும் பிறந்த மகள் தான் தேவர்ஷனா (கதாநாயகி) பெயர்கேற்றார் போல் இவள் உண்மையில் ஒரு தேவதை தான்...

தேவர்ஷனா

பார்ப்பதற்கு இவள் தன்மையானவள் என்றாலும் வீரத்தில் போரில் ஒரு ஆண்மகனுக்கு நிகராக போர் புரிந்து வெற்றியை மட்டுமே கையாண்டவள்... இவள் வாழ்வில் பயம் என்பதே கிடையாது. வில்லம்பு, மந்திரக்கலை இவற்றில் அதிகம் வல்லமை பெற்றவள். தேவர்ஷனா பிறவியிலேயே இரக்க குணம் கொண்டவள்,

தேவர்ஷனா தனது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தன் உயிர் தோழியான கீர்தன்யாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வால்,

கீர்தன்யா..... இவ துரு துருனு இருப்பா, ரொம்ப சுட்டி... இவள் தேவர்ஷனாக்கு தோழி மட்டும் இல்ல தங்கையும் கூட, மன்னர் குருசில் அவர்களின் தம்பி (கஜகரன் ) மகள்.

அருளாசினி, குறளாசினி இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் இருவரும் (குருசில், கஜாகரன்) அண்ணன் தம்பி இருவரையும் மணமுடித்திருந்தனர்.

கஜாகரன் மணமுடிந்து சில மாதங்கள் பின்பு அதாவது, குறளாசினி கருவுற்ற சமையத்தில், ஒரு போரில் கலந்து கொண்டு வெற்றியை கைப்பற்றிய ஆனந்த்த்தின் மிகுதியில் அரண்மனை நோக்கி விரைந்தார்.....

ஆனால் அரண்மனை கஜாகரனது சடலத்தை மட்டுமே வரவேற்றது...

கஜாகரன் மரணத்திற்கு யார் காரணம்?... இனி வரும் காலங்களில் அறியலாம்...

உலகம் தொடரும் ....

மாய உலகம்Where stories live. Discover now