கயிலை மலை :

186 19 22
                                    

காலை வேலையில் பனிக்காற்றுகள் வீச அந்த ரம்மியமான பொழுதினில் தேனைத் தேடி வரும் தேனிக்கள் பூக்களை அடைய அது மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துழைக்க அது பார்ப்பதற்கு ஒருவருக்கொருவர் காதலை பரிமாரிக்கொள்வது போல் தோன்ற, அதில் மெய்மறந்திருந்தவளுக்கு கழுத்துப்பகுதியில் ஏதோ சுரீள் என வலி எடத்தது. அது மட்டுமே இவள் நினைவில் இருந்தது அதன் பிறகு என்ன நடந்தது என நினைவில் இல்லை.... கண் விழித்துப் பார்த்தவர்களுக்கோ தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் இருக்க...

அந்தநேரம் அவள் இருக்கும் அறையின் திரைச்சீலையின் வழியே ஓர் நிழல் உருவம் அது மெல்ல மெல்ல அவளை நோக்கியே வந்துகொண்டிருந்தது...

இது தான் கணவில் கண்டவனது உருவம் என நினைத்துக்கொண்டிருக்க அந்த உருவம் அவளது அறைக்குள் நுழைந்தது... பயத்தில் கத்தியவள் வாயை தன் கையால் அடைத்தான் ஜோ ....

நீ யார் ? எதற்கு என்னை இங்கு கடத்தி வந்தாய்.. உனக்கென்ன வேண்டும் ... நான் யார் என்று தெரியுமா... என் தந்தைக்கு மட்டும் தெரிந்தது அவ்வளவுதான் மரியாதையாக என்னை என் அரண்மனைக்கு அழைத்துச்செல் என்று அவனை பேசவிடாது அடுக்கடுக்காக பேசிக்கொண்டு போனவளை கண்ட ஜோ...
புன்முறுவலுடன்

தாங்களுக்கு விஷத்தேனி கடித்து விட்டது என்றும் தான் வரும்வழியில் இவளை கண்டதாகவும் பிறகு வைத்தியரிடம் அழைத்துச்சென்றதாகவும் அவளுக்கு நடந்தவற்றை அனைத்தையும் விளாவரியாக கூறியவன், தான் அவளுக்கு சொந்தம் என்பதனையும், கீர்தன்யாவிற்கு இதை பற்றின முழு விபரமும் தெரியும் என்பதனையும் மறைத்து விட்டான்....
எனவே வைத்தியர் தங்களது உயிரை காப்பாற்றியது பெரிய செயல்.... இருந்தும் இன்னும் தாங்கள் பரிபூரணமாக குணமடையவில்லை ஆதலால், நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை தேனி கடித்த இடத்தில் பத்துப் போட வேண்டும், இரண்டு நாட்களும் இதை நொடர்ந்து செய்தால் மட்டுமே தங்களது உடம்பில் உள்ள விஷம் முழுவதுமாக முறிய வாய்ப்புள்ளது என வைத்தியர் கூறியுள்ளார்கள். ஆகவே நான் தங்களுக்கு அம்மருந்தினை இடவே இங்கு வந்துள்ளேன்... அனுமதியின்றி அவளது அறைக்குள் வந்ததற்கு அவள் தவறாக எண்ணிவிடக்கூடாது என தன் பக்கம் உள்ள நியாயத்தினை அவளிடம் உறைக்க ....

மாய உலகம்Where stories live. Discover now