காதல்❤

113 8 11
                                    

இரண்டு நாட்களாகவே ஜோவானின் நினைவுகள் ஷனாவை இம்சிக்க தொடங்கியது... "ஜோவை நேரிலே சென்று பார்த்துவிட்டு வந்தால் என்ன? ஆனால் எதற்காக வந்தாய் என காரணம் கேட்டால் என்ன சொல்வது....🤔 ம்ம்....ஏதாவது கூறி சமாளித்து கொள்ளலாம்...” என முடிவெடுத்தவள்... நீண்ட யோசனைக்கு பிறகு  நேராக தன் தந்தையிடம் சென்றாள்...

  ஷனா ஏதோ யோசனையுடன் இருப்பதை பார்த்தவர்... "ஷனா ஏனம்மா சோர்வாக இருக்கிறாய்? உடலுக்கு ஏதேனும் சுகமில்லையா? வேண்டுமானால் அரண்மனை வைத்தியரை  அழைத்து வரச்சொல்லவா?...எதுவாயினும் தயங்காமல் கூறடா......” என்று ஷனாவின் தந்தை ஆதூரமாக கேட்க

ஷனாவோ ஜோவினை சந்திக்க இதுதான் சிறந்த வழி என்றெண்ணி....உடனடியாக ஒரு திட்டம் தீட்டினாள் ஷனா.

"தாங்கள் பயம் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை தந்தையே...விஷ தேனீ கடித்த இடத்தில் சற்று வலி ஏற்பட்டது .... அவ்வளவுதான்...”

தன் அருமை மகளின் உடல் நலத்தை எண்ணி பதறியவர்....
"காவலாளியை விட்டு மருந்தை எடுத்து வர சொல்லவா?, இல்லையேல் வைத்தியரை இங்கு அழைத்து வரச்சொல்லலாமா?...” என அரண்மனை வைத்தியரை அழைத்து வர ஆணையிட முயல அதை தடுத்த ஷனா

“அது உசிதமல்ல தந்தையே... நானே ஏஞ்சினோ நாட்டிற்கு சென்று அந்த வைத்தியர் அம்மாவை பார்த்து மருந்திட்டு வந்தால் சரியாகிவிடும் ".... என கூறியதோடு முகத்தை சற்று சோர்வாகவே வைத்துக்கொண்டாள்...

"வலியுடன் உன்னால் அத்தனை தூரம் பயணிப்பது கடினம் மகளே "... என்க

ஷனா  போச்சு காரியமே கெட்டது என தனக்குள் கூறியவாறு "தந்தையே வலி  ஒன்றும் அதிகமாக இல்லை.... அதோடு முதலில் எனக்கு மருத்துவம் பார்த்தவரிடமே சென்றால் சரியாக வாய்ப்புண்டு ஆகையால் நானே சென்று வருகிறேன்... அப்படியே அத்தையையும் பார்த்து வருகிறேன். அவர்கள் என் அத்தை என்று தெரியாமல் அவர்களிடம் யாரோ ஒருவர் போல் அன்று நடந்துகொண்டேன்... கீர்தன்யாவை வேண்டுமானால் துணைக்கு அழைத்து செல்கிறேன். அனுமதி மட்டும் தாருங்கள் தந்தையே".

Vous avez atteint le dernier des chapitres publiés.

⏰ Dernière mise à jour : Jul 12, 2020 ⏰

Ajoutez cette histoire à votre Bibliothèque pour être informé des nouveaux chapitres !

மாய உலகம்Où les histoires vivent. Découvrez maintenant