கனவு :

324 31 39
                                    

சூரியன் தனது பணி நிறைவடைந்து விட்டெதென நகர்ந்து சந்திரன் அதனது பணியை துவங்க வழிவிட்டது... காரிருள் மேகங்கள் சூழ்ந்து அதனை ராப்பொழுதாக்கின...

மிகவும் மென்மையான குரலில்.., வர்ஷா என்று அவளது பெயரை அழைக்க அது தனது அருகாமையில் கேட்டதும். ஓசை வரும் திசையினை நோக்கினாள் தேவர்ஷனா, அங்கு கண்ணை பரிக்குமளவிற்கு பிரகாசமான வெளிச்சம், பார்ப்பதற்கு அது ஒரு மாணிக்க கல் பதித்த ஆபரணம் போன்று சிவப்பு வண்ணத்தில் ஜொலித்தது.

அதை கண்டதும், இது நமது ராஜ்ஜியத்தின் மிகப் பெரிய பொக்கிஷம் என்றும் அது மட்டுமின்றி பிறழ்பெடை ராஜ்ஜியத்தை தீய சக்தியிடமிருந்து காக்கும் அரண் இது தான் என்றும் தன் தந்தை தன்னிடம் கூறியது நினைவு வந்தது, இது வேரொரு மானிடர் கையில் கண்டவுடன் திடுமென எழுந்து பார்க்கும் பொழுது சுற்றில் ஏதுவுமில்லை தான் கண்டது கனவு என ஊர்ஜீதமாகியதும். உடல் முழுவதும் நீர் சுரப்பிக்க அந்த மந்திரக்கல் எப்படி வேரொருவன் கையில்?... ஒருவேளையில் அவன் திருடனோ....

அவனது உருவத்தினை வைத்து பார்கையில் அழகாகவும், ஒரு மாவீரனை போன்றல்லவா காட்சியளித்தான், என தன்னையும் அறியாமல் முதன் முதலில் ஒரு ஆண்மகனை அதுவும் அவன் யாரென்றும் அறியாமல் உருவத்தினை மட்டுமே வைத்து அவனை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டால்...

திருடன் என்றால், தனக்கு அம்மந்திரக்கல் கிடைத்ததும் தப்பித்தல்லவா சென்றிருக்க வேண்டும், பிறகு ஏன் தன்னை அழைத்தான், அதுவும் உரிமையுடன் வர்ஷா என்று... தனது பெயரை அவன் அவ்வாறு அழைத்ததை எண்ணி சிறியதாக கோவத்தில் அந்திவானமாய் சிவந்து சினம் எட்டிபார்த்தது, இருந்தும் அவன் அழைத்தவிதம் அவளுக்கு பிடிக்கதான் செய்தது பாவம் பேதையவள்அதை உணரவில்லை....

இவ்வாராக இவள் மனம் பிதற்ற இத்தகைய மனநிலையில் எப்படி உறக்கம் திரும்ப அவளை அணைக்கும்... தூக்கம் அவளை விட்டு வெகு தூரம் சென்று விட்டது.

பொழுதும் விடிந்தது.. ஆனால் தேவர்ஷனாவின் மனநிலை மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் சற்று தடுமாற்றத்துடனே காணப்பட்டாள், என்றும் போல் தன் தந்தை,அன்னையிடம் ஆசி பெற்று அவ்களிடமிருந்து விடைபெற்று தன் அறைக்கு செல்லும் நிலையில் தந்தையிடம் மாட்டிக் கொண்டாள்.

மாய உலகம்Where stories live. Discover now