அகோரனின் சூழ்ச்சி வலை :

143 27 42
                                    

அத்தையின் அன்பிலும் தாய் மாமனின் பாசத்திலும், மூழ்கினான் ஜோ... தான் எதிர்பார்த்ததை விட மாமா தன்னிடத்தில் எவ்வளவு பாசத்தை வைத்திருக்கிறார். எவ்வளவு பெரிய மாமனிதன் நாட்டையே ஆலும் அரசர் இன்று எனக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறார்... அதை நினைக்கும்பொழுது சற்று கர்வமாக எண்ணினான்...

குருசில் அவர்களுக்கு தங்கையின் மீது எல்லையற்ற பாசத்தினை வைத்திருக்கிறார் குந்தவியும் அவ்வாரே தன் அண்ணன் என்றால் அவ்வளவு பிரியம்...
அவள் கணவன் இறந்த பொழுது இனி இவ்வூரில் நீ தனியாக அதுவும் ஒரு குழந்தையுடன் வாழ்வது என்பது கடினம் ஆகையால் என்னுடன் வந்துவிடுமா என அவர் தந்தை மகேந்திர வர்மன், அண்ணன் குருசிலும், அழைக்க அதற்கு,

குந்தவி : என் கணவன் தவறான வழியில் சென்றது மட்டுமல்லாமல் ஊர்மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் இழந்துவிட்டார்... அதுமட்டுமின்றி இனி தந்தையை போன்றுதான் மகனும் இருப்பான் என்ற அவச்சொல் வந்துவிடக்கூடாது ஆகையால் என்னை மன்னியுங்கள் அண்ணா என் மகனை ஒரு வீரணாக வளரக்க ஆசைப்படுகிறேன் என மறுப்பு தெரிவித்து விட்டார்.... தனது அன்னையின் ஆசைக்கினங்க ஜோவான் நல்லொழுக்கங்களையே கற்றுக்கொண்டான், அரியாசனை மீது ஆசைப்படாதவன் தான் ஒரு படைத்தலைவன் என்றே எண்ணுபவன்... முடி இளவரசர் எனும் கர்வம் துளியும் இல்லாதவன்... வேகத்திலும், விவேகத்திலும் வல்லமை வாய்ந்தவன்.... போரில் அனல் கக்கும் நெருப்பினை போன்றிப்பான்.... அன்னையின் மடியில் துயில் கொள்கையில் இன்னும் இவன் வளர்ந்த குழந்தை... இன்று ஊரே அவன் வீரத்தையும் அவனது அரசாளும் திறமையையும் மெச்சுகின்றனர்...

ஒரு அன்னைக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்.... இன்று ஜோவான் ஒரு சிறந்த அரசனாக அவனது வளர்ச்சியை பார்த்து பிரமித்தார் குருசில். அதுமட்டு மின்றி அவனது இத்தகைய வளர்ச்சியை பாராட்டும் விதமாக தனது அரண்மனைக்கு வரவழைத்து விருந்தளித்தர்க்கு இதுவும் ஒரு காரணம்....

மாய உலகம்Where stories live. Discover now