கொஞ்சம் பேசட்டுமா?

1K 42 32
                                    

ஆங்கில வாட்பேட் படிப்பவர்களுக்கு பரிட்சயமான கதை தான் கோடீஸ்வரன்(billionaire) அல்லது நடிகன் + டீச்சர்/டாக்டர்/கடையில்  வேலையில் நிற்கும் பெண்/ காலேஜ் ஸ்டூடண்ட். அனிரூத் வந்து இது தான் என்னோட கேர்ள்ப்ர்ண்ட் நு சொன்னா எப்படி இருக்கும்?! கூகில் சுந்தர் பிச்சையின் மகன் நம்மை பெஸ்ட் ப்ர்ண்ட் நு அறிமுகம் செய்தால் எப்படி இருக்கும்? சில்லியான ஆசை ஆனால் எல்லா இளையர்களுக்கும் வரும் ஆசை என்பதால் வெகு ஈஸியாக விற்கும் கதை இது, என் போட்காஸ்ட் இல் omahazeeya சொல்லி இருப்பார். இப்பவும் billionaire/actor கதைக்கு ரீட்ஸ் கொட்டுது மைனா. இது எழுதுனா தான் கதையா நு முன்னாடி யோசிச்சிருக்கேன். இந்த billionaire/நடிகன் + டாக்டர் கதை எத்தனை தமிழில் உள்ளதென தெரியவில்லை ஆனால் ஆங்கிலத்தில் கொட்டிக்கிடக்கிறது.

இந்த பெரிய ஆளு + சாதாரண பெண் கதைக்கு பெண்ணை டாக்டர் என அறிமுகப்படுத்துவது நம் சின்ன ஆசைக்கு ஒரு moral superiority சாயம் பூசுவது. நடிகன் தனக்கு எல்லோரும் மரியாதையும் பணிவிடையும் செய்யவேண்டுமென திமிராய் நினைப்பதும் அவனை சாதாரணமாக நம் கதானாயகி நடத்துவதும், அப்புறம் இவள் வழியாமல் சாதாரணமாக நடத்துவதில் இம்பிரஸ்(impress) ஆகி காதலிப்பதும் அதற்கு முன் இரு ஈகோக்களூக்கு சண்டை வருவதும் இறுதியில் காதலிலும் திருமணத்திலும் முடிப்பதும் தான் இந்த billionaire/நடிகன் ப்லொட்(plot). இதில் டாக்டர் தன் ஈகோவை விட்டுக்கொடுக்கமாட்டாள், நான் செய்வது பெரிய வேலை நான் உன்னை ஒழுங்காக தான் நடத்துகிறேன் எதற்கு உன்னிடம் நன்றாக பேச வேண்டும் எனும் திமிர். அதே திமிர் நடிகனிடமும் இருக்கும்: நான் அவ்ளோ பெரிய நடிகன், எனக்கு மரியாதை தரனும்னு.

Cliche எழுத மற்றவர்கள் இருக்கிறார்கள், சின்ன சின்ன அழகியலை எழுத நான் உள்ளேன் என சொல்லிவிட்டு அதே நடிகன்- டாக்டர் cliche எழுதுறீங்களே மைனா நு இப்போ கேட்பீங்க. குட் கேள்வி! இந்த cliche plot கதையை சிறப்பாக  எழுதுவது தான் சிறந்த எழுத்தாளருக்கு சவால், நான் எடுக்குக் கொடுத்த சேலஞ்ச். அதுவும் இந்த மாதிரி ஒரு cliche fantasyஐ ரியாலிஸ்டிக்(realistic) ஆ நீ மாத்தனும் நு உள் மனசுல ஒரு குரல்.

இக்கதையில் இருவர் சண்டை போட்டு பின் காதலிப்பர் என நினைத்தால் அதற்கு பல கதைகள் உள்ளன. இங்கு ஒரு டாக்டர்-பேஷண்ட் உறவு. நடிகன் வருண் ஆ ஊ என கொஞ்சமாக தான் குதிப்பான் மற்றபடி சமுதாயம் சொன்னது போல் கடினமாக உழைத்தவனின் வெற்றி இரக்கமின்றி பறிக்கப்படும்போது அவன் சந்திக்கும் கோபத்தையும் சோகத்தையும் காட்டியிருக்கிறேன். தோல்விக்கு பயந்தவனின் முகத்தைக் காட்டி இருக்கிறேன். வீட்டிலேயே அடங்கிக்கொண்டு சுய பரிதாபத்தில் மூழ்க எத்தணிக்கும் ஒரு ஆணைக் காட்டியிருக்கிறேன். மெண்டல் ஹெல்த் ஐ தொட்டும் தொடாமலும் காட்டியிருக்கிறேன். (திடீரென வீட்டிலேயே சாப்பிட்டு தூங்கி நேரத்தை கழிக்கும் நண்பர்கள் இருந்தால் கவனம் தேவை, அவர்களை தனியாக விடாதீர்கள்).

அவனின் தனிமையையும் பரிதாபத்தையும் treat பண்ணி சுய மரியாதையையும் மன வலிமையையும் மீட்கும் ஒரு டாக்டரைக் காட்டியிருக்கிறேன். இதுவும் மருத்துவம் தான். ஒரு மனிதன் குணமாகுவது எந்த அளவுக்கு மருந்தில் இருக்கிறதோ அதை விட அதிகமாக அவனின் சுற்றுச்சூழல், குடும்பம், நண்பர்கள் ஆகியவற்றில் இருக்கிறது.

அன்பையும் பரிவையும் காட்டும் மருத்துவம் அப்பேஷண்ட் பழைய வாழ்க்கைக்கு திரும்பிய பின் அவனை தூரத்திலேயே வைத்திருக்க சொல்கிறது. பேஷண்ட்ஸ் உடன் ரிலேஷன்ஷிப் கண்டிப்பாக கூடாது!! நட்பு தவிற்க வேண்டும். ஆனால் ஒரு சில தருணங்களில் ஒரு டாக்டரும் பேஷண்ட் உம் நண்பர்களாகலாம். 

ரொம்ப அட்வைஸ் பண்ணுறேன்னு நினைக்காதீங்க. மனதில் தோன்றியதை கதையாக்கிவிட்டேன் இதையும் எழுதி விட்டேன்.(book cover looks bright and cute nah:)

நன்றி:)

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now