யாதிரா - 7

937 55 13
                                    

"இது நீங்க தானே?"

"இல்ல என் தங்கச்சி. தெரிஜ்சுட்டே கேட்குறீங்க மிஸ்டர் வருண். ரொம்ப கஷ்டப்பட்டு தேடுனீங்களோ?" நக்கலாய்க் கேட்டாள் யாதிரா.

"ஆமாம். நீங்க எப்போதும் இந்த மாஸ்க் போட்டிருக்கீங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது அதான் கூகிள் கிட்ட கேட்டேன் மிச்ச முகத்தைக் காட்டுன்னு. சரி இந்த மாஸ்க் ஐ எடுக்கவே மாட்டீங்களா?"

"மிஸ்டர் வருண் இது என் உயிர் காக்கும் மாஸ்க். எடுக்க முடியாது."

"ஜஸ்ட் முகத்தைக் காட்ட கூடவா?"

"முகம் முக்கியமா உயிர் முக்கியமா நு நீங்களே சொல்லுங்க. நீங்க தனி ரூம்ல ராஜா மாதிரி இருக்கீங்க சோ கோரோணா உள்ள யாரையும் நீங்க மீட் பண்ண போறதில்ல. ஆனா எனக்கு ரிஸ்க் அதிகம். தினமும் புதிய ஆட்களைப் பார்க்குறேன்."

"தனிக் காட்டுக்கு ராஜாவாக இருப்பது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா?" தன்னையும் மீறி வார்த்தைகள் கொட்டின வருணிடமிருந்து.

நிலவை மறைக்கும் மேகமாய் கலகலப்பாய் போய்க்கொண்டிருந்த உரையாடல் திடீரென தடம் மாறியது.

"ஐம் சாரி டாக்டர்."

"கஷ்டத்தை சொல்ல எதற்கு சாரி? பகிர்துக்க தான் மனுஷங்க இருக்காங்க. ஒன்னு கேட்கலாமா, விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்க."

"கேளுங்க."

"ஏன் உங்கள பார்க்க அம்மா அப்பா யாரும் வரல? ரிகவரிக்கு மருந்து விட குடும்பமும் நண்பர்களும் முக்கியம்"

"ப்ர்ண்ட்ஸ் வரல. நான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன். எந்த ப்ரெண்ட் உண்மையா பார்க்க வருகிறான் எவன் மீடியாவுக்கு ஸ்கூப்(scoop) சேகரிக்க வருகிறான் என தெரியவில்லை. குடும்பம்... உங்களுக்கு தான் அம்மாவ தெரியுமே"

"பாடகி வைதேகி. தமிழர்களுக்கு நல்லா தெரிந்தக் குரல்!"

"ஆமாம். அம்மாவுக்கு டிமன்சியா(Dementia). அதுனால அவங்கனால தனியா வர முடியாது. அப்பாவுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை."

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now