யாதிரா - 11

822 54 8
                                    

அதன் பின் ஆல் வெல் மருத்துவமனையில் ஒவ்வொரு முறை போன் அடித்தாலும் யாதிராவின் மனம் படபடத்தது. ஆனால் வருண் அல்ல. வருண் மீண்டும் போன் செய்ய மூன்று நாட்களாயின.

"மிஸ்டர் வருண், எப்படி இருக்கீங்க?"

"டாக்டர், நீங்க சொன்ன மாதிரி என்னோட ரோலை(role) செகண்ட்(second) ஹீரோவுக்கு விட்டுக்கொடுத்துட்டேன். நான் படத்துல அரை மணி நேரம் வந்தாலும் ஆச்சரியம் தான்."

"ம்ம்ம். அடுத்த மூனு நாள் என்ன பண்ணீங்க?"

"தூங்குனேன். பசித்தபோது சாப்பாடு ஆர்டர் செய்தேன். நல்லா தான் இருக்கேன்."

அவனின் பதில் அவன் நன்றாக இல்லை என்பதை சொன்னது.

"வாக்கிங்?"

"வீல்சேர் இல்லாம என்னால ஒரு கிலோமீட்டர் கூட நடக்க முடியாது. வீல்சேர்ல போக எனக்கு இஷ்டம் இல்ல, பரிதாபமா பார்ப்பாங்க." வலியை விட சுயமரியாதை குத்தியது.

"சரி வருண். வீல்சேர் இல்லாமல் 500 மீட்டர் நடந்துட்டு வாங்க"

"ம்ம்ம்"

"நீங்க என் கிட்ட பொய் சொல்லல, உங்க கிட்டயே பொய் சொல்லுறீங்க. வாக்கிங் போங்க. அதோடு வழில ஒருத்தருக்கு 50 ரூபாய் பிச்சை போடுங்க. டாக்டராக சொல்றேன் இதுவும் உங்களோட ப்ரிஸ்கிரிப்ஷன்(prescription) தான். போனை வச்சிடுறேன்." வருண் எப்படியாவது யாரிடமாவது பேச வேண்டும், இன்னொரு மனிதனைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்பதே யாதிராவின் ஆசை. தனியாய் தொலைந்த ஆட்டை(goat) இவள் தான் மந்தையில் சேர்க்க வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் வருணுக்கு வெளியில் போக விருப்பம் இல்லை. தூக்கமும் உணவும் சௌகரியமாய் அவனை சூழ்ந்திருந்தன. ஆயினும் எப்பொழுது போன் செய்தாலும் தனக்காக போன் எடுத்து நல்ல விதமாக பேசும் அவளுக்காகவாவது இதை செய்யவேண்டுமென தோன்றியது. தன்னைப் பற்றி யோசிக்கும் அம்மனதுக்காக முதல் முறையாக 6 நாட்களுக்குப் பின் வீட்டிலிருந்து காலடி எடுத்து வைத்தான். ஒரு கிழவர் அவனை ஓவர்டேக் செய்த காமடியும் நிகழ்ந்தது. அவள் சொன்னது போல் வீட்டிலிருந்து 500 மீட்டர் நடந்து மெயின் ரோடுக்கு வந்தான். இப்போது பிச்சைக்காரனைத் தேட வேண்டும். தூரத்தில் தெரிந்த டீ கடையின் அருகே கண்டிப்பாக பிச்சைக்காரர்கள் இருப்பர் ஆயினும் நடக்க மாச்சலாக இருந்தது.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now