யாதிரா -2

1.3K 70 6
                                    

வருண் அன்று முழுக்க கண் திறக்கவில்லை. காலை 8 மணிக்கு துவங்கிய ஷிப்ட் வேலை இரவு 8 மணிக்கு முடிந்தது. டீனிடம் வருணின் நிலைமையை சொல்லலாம் என நினைத்தால் அந்த மனுஷன் 6 மணிக்கே வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆம், இத்தனை வருடங்கள் இரவு பகலாய் உழைத்தவர் இப்பொழுது தான் ஓய்வை சுவைக்க ஆரம்பித்திருந்தார், இனித்தது.

பன்னிரண்டு மணி நேரமாய் தன் உயிரைக் காத்த மாஸ்க், face shield, gloves என அனைத்தையும் கழட்டி பிரத்தியேக குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு ஓலா ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவள் அக்குளிர் காற்றிலும் மூடிய பனியிலும் துயிலிலும் விழித்திருக்க சிரமப்பட்டாள். ஆனால் பெண் ஆகிற்றே, தன் பாதுகாப்பை ஒரு நொடியும் கைவிட முடியாததால் விழித்திருக்க போனை நோண்டினாள். அம்மா அப்பாவிடம் வாய்ஸ் நோட் வந்திருந்தது. ட்விட்டரில் கோரோனா தடுப்பூசி பற்றிய நம்பகத்தன்மையான சில ட்வீட்ஸ் Retweet செய்தாள். தடுப்பூசி போட்டால் ஜுரம் வரும், காய்ச்சல் வரும் என ஒருவன் பினாத்திக்கொண்டிருக்க அதற்கு தெளிவாய் சிலருக்கு மட்டுமே நிகழும் rare adverse reactions பற்றி ட்வீட் செய்தாள். வருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் 'hot news' ஆக ட்விட்டரில் வந்தது.

ஆட்டோ வீட்டின் முன்னால் நின்றது. வீட்டின் கதவு இவளின் வருகைக்காக திறந்திருந்தது. உள்ளே வந்ததுமே மிகக் கவனமாக எதையும் தொடாமல் குளிக்க சென்றாள் யாதிரா. ஈரக் கூந்தலை டவலில் மடித்துகொண்டு வெளியே வர அங்கே அம்மா இட்லியை தட்டில் பரப்பிக்கொண்டிருந்தாள்.

"ஏம்மா.. பாலிவூட் ஆக்டர் வருணை உங்க ஹாஸ்பத்திரில சேர்துக்காங்களாமே?" அப்பா ஹாலிலிருந்து குரல் கொடுத்தார்.

"அதான் நியூஸ்ல பார்த்துட்டீங்கள்ள, மற என்ன தெரிஞ்சுட்டே கேள்வி?" அம்மா யாதிராவின் இடத்தில் பதில் அளித்தார்.

"அதான, நல்லா கேளு மா. பேஷண்ட் பத்தி நான் ஒன்னுமே பேச மாட்டேன் நு தெரிஞ்சும் கேட்குறாரு."

"சும்மா டெஸ்டிங்" அப்பா சிரித்தார். மூன்று மணிக்கு சாப்பிட்ட ஆறிப்போன புளியோதரை முன் அமிர்தமாய் இருந்தது தேங்காய் சட்னி கடலில் மிதந்த இட்லி.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now