யாதிரா - 4

1K 64 8
                                    

"சொல்லுங்க மிஸ்டர் வருண்."

"எனக்கு நேத்து என்ன சர்ஜரி பண்ணீங்க? கிட்னிய எடுத்திட்டீங்களா?" கம்மி வால்யூமில் பதட்டமாய் வருணின் குரல் ஒலித்தது.

அவனின் கிட்னி கேள்வியைக் கேட்டு யாதிராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துவிட்டாள் கொஞ்சம். "ம்ம்ம்.. முதல்லேர்ந்து எல்லாம் சொல்லுறேன். பட் உங்க ஹெல்த் பத்தி பேச பிரைவஸி வேணும். உங்க மேனேஜர்..."

"இல்ல. அவரு இங்க தான் இருப்பார்," மனம் மாறிவிட்டான் என நினைத்த யாதிராவுக்கு எடுக்குமடுக்காய் தான் வருண் இருப்பான் என புரிந்தது.

"நேற்று உங்க வயித்துல ஒரு கம்பி கொஞ்சம் உள்ள போயி இருந்தது. X-ray எடுத்தோம். Scan report உங்க மேனேஜர் கிட்ட தான் கொடுத்தேன். எந்த முக்கிய ஆர்கனும் பாதிப்பாகல கம்பியால. அப்புறம் உங்க spleen ruptureஆகி இருந்தது, breakநு சொல்லலாம். இதுனால நிறைய ரத்தம் போகிட்டு இருந்துச்சு. அவசரமா சர்ஜரி பண்ணி spleenஐ எடுத்துட்டேன்."

"ரெண்டு பக்கமும் எடுத்துட்டீங்களா?"

"இல்ல மிஸ்டர் வருண். spleen மனுஷனுக்கு ஒன்னு தான் இருக்கு. அது இல்லாட்டியும் மனுஷனால உயிர் வாழ முடியும். சோ transplantலாம் தேவையில்லை. வேற எதாவது கேட்கனும்னா தயங்காதீங்க." அவளின் புன்னகை மாஸ்க் பின்னால் மறைந்திருந்தாலும் கண்களில் மிளிர்ந்தது.

"ம்ம்ஹூம். நான் எப்போ வீட்டுக்கு போகலாம்?"

"splenectomy முடிஞ்சு அட் லீஸ்ட் ஒரு வாரமாவது பெட் ரெஸ்ட் இருக்கனும். எழுந்திரிக்க கூடாது. சோ ஒரு வாரம் டைம்."

வருண் தலையசைத்தான். அவனின் ஒத்துழைப்பை பயன்படுத்த எண்ணினாள் யாதிரா, "மிஸ்டர் வருண். உங்கள ஒரு செக்-அப் பண்ணிடட்டுமா?"

அவளின் ஒரு வார பெட் ரெஸ்ட் ஐ பற்றி இன்னும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் தலையசைத்தான். மானிடர்களில்(monitor) தெரிந்த அவனது oxygen, பல்ஸ் ஆகியவற்றை நோட்டமிட்டாள். "சட்டைய கழட்டனும்," என சொல்ல வருண் ஹாஸ்பிடல் கவுனின் முதல் மூன்று பொத்தானை கழட்டினான். முதல் மூன்றைக் கழட்டினாள் எப்படி வயிறு தெரியும் என நினைத்தவள் இன்னும் இரு பொத்தானை அவளாகவே கழட்டினாள். தான் சர்ஜரி செய்த இடத்தில் எதாவது வீக்கமோ மாற்றமோ தெரிகிறதா என ஆராய்ந்தாள். பின் மெல்லிதாய் சர்ஜரி செய்யப்பட்ட இடத்தையும் அமுக்கி பார்த்தாள். திருப்தியடைந்தவள் அவனின் பட்டனை போட்டுவிட்டாள். எல்லாம் முடிந்ததென நினைத்தவளுக்கு திடீர் அதிர்ச்சி. யாரோ அவனுக்கு யூரின்(urine) catheter பொருத்தியிருந்தனர், யாரோ அல்ல நைட் ஷிப்ட் ரமேஷ். டாக்டர் ரமேஷ் இவளிடம் இதை சொல்லவும் இல்லை. இவள் யூரின் bag வைக்கச் சொல்லவும் இல்லையே.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now