யாதிரா - 3

1K 60 19
                                    

பால்கனியில் டீ டம்ளருடன் நின்றவள் கீழே ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் காலனியின் ஒவ்வொரு பிள்ளைக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவர்களின் அம்மாவுடனும் பேச்சு வார்த்தையில் இருந்தாள். எல்லாம் அதே சளி, காய்ச்சல், உடம்பு வலி என்ன பண்றது யாதிரா எனும் கேள்விகள் தான். முடிந்த அளவுக்கு அவர்களை கிளினிக்(clinic) செல்லுமாறு கெஞ்சினாலும் வீட்டு அபார்ட்மண்டிலேயே ஒரு திறமையான டாக்டரை வைத்துக்கொண்டு வெளியே அலைய யாருக்கும் ஆசை இல்லை.

"அடுத்த காலனிக்கு நாம வீடு மாறுனா எம் மக பிஸியோதிரபிஸ்ட் இல்ல நர்ஸ் நு சொல்லிடு மா."

"சொல்றேன். இப்போ உப்புமா சாப்டு. லஞ்ச் பேக் பண்ணி வச்சிர்கேன். அப்பாவும் நானும் சந்தைக்கு போறோம்."

"ஒகே! டாட்டா! வரும்போது எனக்கு எதாவது வாங்கிட்டு வா," குழந்தைகள் பெரியவர்களைக் கேட்பது போல் யாதிராவும் கோரிக்கை வைத்தாள். உப்புமாவை முழுங்கிவிட்டு backpackஐ எடுத்துக்கொண்டு மீண்டும் ஓலா ஆட்டோவில் ஏறினாள்.

ஆல்-வெல் மருத்துவமனையின் வளாகத்தினுள் உள்ளே செல்ல முடியாமல் பல பத்திரிக்கையாளர்கள் வாசலில் இடம் பிடித்து நின்றனர். நேற்றையக் கூட்டம் குறைந்திருக்கும் என நம்பியவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும் உள்ளே செல்லும் ஆட்டோ இன்று வெளியே நிறுத்தப்பட்டது. செகியூரிட்டியிடம் தன் முகத்தைக் காட்டினாள் யாதிரா. "சாரி மா. இந்த நியூஸ் ஆளுங்களோட பைக், கார் எதுவும் உள்ள போகாம இருக்க எல்லா வாகனத்தையும் கேட் இலேயே நிறுத்த வேண்டி இருக்கு. நீ போ மா," என வழியனுப்பினார் செந்தில் அண்ணா.

நிறைந்திருந்த கூட்டத்தைக் கண்டு பிரமித்தாள், அதைவிட அதிகம் பதற்றமடைந்தாள் யாதிரா. நோயாளிகளின் பாதுகாப்புக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் பாதிப்பு உண்டாகுமே என எரிச்சல் அடைந்தாள். நைட் ஷிப்ட் டீம் எதையெல்லாம் கையாண்டிருக்குமோ என மூளை கணக்குப்போட்டது. அவளின் எண்ணங்களுக்கு பதில் அளிக்கும் வண்ணம் நைட் ஷிப்ட் இன் ​​​​​Emergency Consultant , ரமேஷ், இவளிடம் வேலையை ஒப்படைக்க வந்தார்.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now