யாதிரா - 8

857 60 4
                                    

ஐந்தாம் நாள்

தன் இரண்டாவது வீடான ஆல் வெல் மருத்துவமனையில் யாதிரா அடியெடுத்துவைத்தாள். நேற்றைய சர்ஜரி முடித்த பேஷண்ட்களை கூர்மையாக கவனித்தாள். மற்ற மருத்துவர்களை மீட்டிங் இல் சந்தித்து சில சிக்கலான கேஸ் பற்றி கலந்துரையாடினாள். வருணின் அறைக்கு வரும்போது மணி 9.30 ஆகியிருந்தது. அரை மணி நேரம் தாமத்ததில் வருண் என்ன என்னவோ நடத்திவிட்டான்.

அவன் அறையை நெருங்கியவள் அறையின் வெளியே மேனேஜருடன் இரு புதியவர்கள் பேசுவதைக் கண்டாள். ஓர் ஆணும் பெண்ணும் டிராவல் சூட்கேஸுடன்(travelling suitcase) நின்றனர். ஒரு வேளை வருணின் மும்பை நண்பர்கள் ப்ளைட் பிடித்து வந்திருக்கிறார்களோ என யோசித்தவள் அருகில் சென்று மேனேஜருக்கு வணக்கம் வைத்தாள்.

மேனேஜர் அவ்விருவரையும் அறிமுகப்படுத்தாமல் திருட்டு முழி முழித்தபோதே யாதிராவுக்கு புரிந்துவிட்டது இவர்கள் நண்பர்கள் அல்ல என. சும்மா விடுவாளா.. நீங்க சொல்லாட்டி என்ன நானே கேட்கிறேன் என யார் இவர்கள் என கேட்டுவிட்டாள்.

"இவங்க மேக்-அப் ஆர்டிஸ்ட். இன்னைக்கு வருணோட இண்டர்வியூவுக்கு மேக்-அப் போட வந்திருக்காங்க."

"அப்படியா.. குட்! சரி, கோரோணா டெஸ்ட் எடுத்தீங்களா?" விருந்தாளியிடம் சாப்டீங்களா என கேட்பது போல் புன்னகையுடன் யாதிரா திரும்பிக் கேட்டாள்.

"இல்ல எடுக்கல."

"அப்போ இந்த வார்ட் பில்டிங்க் கிட்டயே நீங்க நிற்க கூடாது. என்ன சார் இது, உங்களுக்கு தான் தெரியும்ல. விசிட்டர் யாருக்கும் அனுமதி இல்லைன்னு. நீங்க மிஸ்டர் வருண் கூட இருக்கிறதுக்கு பர்மிஷன் கொடுத்ததே பில்டிங் விட்டு நீங்க வெளிய போக மாட்டீங்கன்ன கண்டிஷன்ல தான். இப்போ புதுசா ஆள கூட்டிட்டு வந்துருக்கீங்க."

"இது வருணுக்கு ரொம்ப முக்கியமான இண்டர்வியூ. மேக்-அப் ரொம்ப முக்கியம்."

"கோரோணா டெஸ்ட் இல்லாம முடியாது. இண்டர்வியூ எடுக்கிற கேமரா மேனும் ஜர்னலிஸ்ட் உம் டெஸ்ட் எடுக்கனும். ரிசல்ட் வர ஒரு மணி நேரம் ஆகும்"

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now