யாதிரா - 10

807 60 4
                                    

வருண் மும்பை திரும்பி ஒரு மாதமாகி இருந்தது. பிஸியோ சென்றான். பிஸியோ தாண்டி ஜிம் இல் வொர்ட் அவுட் செய்தான். விட்ட இடத்தைப் பிடிக்க வெறியோடு வேலை செய்தான் வருண். ஓரளவுக்கு உடம்பு தேறியதும் ஒப்பந்தம் போட்ட படங்களில் ஒன்றை முடித்து தருவதாக வாக்குறுதி அளித்து கெஞ்சி மீண்டும் ஷூட்டிங் இடத்தில் கால் வைத்தான். இருட்டை கிழித்துக்கொண்டு சூரியன் ஒளிரத் தொடங்கியது. அவனின் உலகமும் பிரகாசமடைய தொடங்கியது.

கேமரா முன் நின்றதும் வெற்றிக் கிட்டுமா என்ற சந்தேகம் மறைந்து புது உற்சாகம் பூத்தது. தனக்கான இடத்தில், பழக்கப்பட்ட இடத்தில், தன் திறமைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் இடத்தில் மீண்டும் நிற்பது ஒரு வித போதை. நம்மை யாராலும் அசைக்கமுடியாதென்ற போதை.

திறமையுடன் கடின உழைப்பும் உள்ளவரென பெயர் எடுத்த வருண் தன் பழைய பெயரைக் காப்பாற்றுவதில் முனைப்பாய் இருந்தான். இரண்டு ஹீரோ படம் அதில் இவன் தான் பெரிய ஹீரோ. ஒரே ஸ்டார் வருவதைவிட இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகம் என்பதால் இதை ஒரு முறை முயற்சி செய்யலாமென நினைத்தான். இநநிலமையில் வெற்றி முக்கியம், அதை இரண்டாய் பிரித்தாலும் பரவாயில்லை.

பாதி பட ஷூட்டிங் முடிந்தது. திடீரென அன்று வருணின் வயிற்றுப் பகுதி ஊசி குத்துவது போல் வலிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நடித்தான் பின் அம்மிகப் பெரிய நடிகனால் கூட வலியை மறைக்க முடியவில்லை. பிரேக் கேட்டுவிட்டு காரவேன் உள் நுழைந்தது தான் தாமதம் வலியின் தாக்கத்தில் டபாரென மயங்கி தரையில் விழுந்தான். நல்ல வேளை அங்கு மேனேஜர் இருந்தார். யாருக்கும் தெரியாமல் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பேக்-அப் சொல்லிவிட்டார்.

சுமூகமாக போய் கொண்டிருந்த பயணம் இப்படி மீண்டும் தடங்கலாகும் என வருண் நினைக்கவில்லை. இனிமேல் மூன்று நாட்களுக்கு பெட் ரெஸ்ட் எடுக்குமாறும் அதற்கு பின் நடித்தாலும் இந்த அளவுக்கு உடம்பை வருத்தக்கூடாது எனவும் மருத்துவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார். அவரின் பேச்சை மதிக்காமல் நடிக்க வருணுக்கு வெறியாக இருந்தாலும் அவனுக்கே தெரிந்தது அவன் உடம்பு ஒத்துழைக்காது என. நொறுங்கிய கனவை சேகரித்துக்கொண்ட மனம் அதை ஒட்ட வைக்க யாதிராவைத் தேடியது. அவளைத் தொடர்பு கொள்ள வழி தெரியவில்லை. தன் போன் நம்பரை வாரி வழங்கிய டீன் தன் ஊழியர் அதுவும் பெண் டாக்டர் என்றதும் முடியாதென சொல்லிவிட்டார் அன்று ப்ளைட் ஏறும்போதே. இருந்தும் மனம் அவளின் குரலுக்காக ஏங்கியது.

யாதிரா (COMPLETED )Where stories live. Discover now