அத்தியாயம் - 9

1K 50 35
                                    

வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தால் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து சந்திக்கும் பொழுது ஒரு எதிரியை பார்ப்பது போலவா சந்திக்க நேர்ந்தது... எத்தனை எதேச்சையாய் சந்திப்புகள் நிகழ வாய்ப்புள்ளது அனைத்தையும் தாண்டி இவ்வாறொரு நிலையிலா காண வேண்டும்... 

நலம் விசாரிக்க வேண்டிய இதழ்கள் அவனை அழிக்க சபதமெடுக்க வேண்டிய அவசியம்... ஆற தழுவ துடிக்கும் கைகள் இப்பொழுது அடிக்க துடிக்கின்றது... காலம் விளையாடும் விளையாட்டும் அதில் மடியும் உறவுகளும்...

அலுவலகத்தில் உதய்யை அவன் கண்கள் அளவெடுத்தப் பொழுது அவனுடைய கம்பீரமான தோற்றத்தில் மனம் மகிழ்ந்தாலும் அவன் கண்களில் இருந்த வெறுமை அவனுடைய மனதை பளிச்சிட்டு காட்டியது... ஆனால் இன்று தன்னை கட்டி அழுகும் இந்த வளர்ந்த பிள்ளையை பார்க்கும் பொழுது அவனை விட ஆதி அதிகம் உடைந்திருந்தான்...

அவன் உடைந்திருக்கின்றான், ஏதோ மரணத்திற்காக காத்திருப்பவன் போல் நிற்பவனை தள்ளி விட்டு அறைய தோன்றியது... ஆனால் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாளும் மனம் களங்காதவன் இன்று இவ்வாறு பேசும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஆதியால் சற்றும் யூகிக்க முடியவில்லை... 

வீசி எறிந்தான் ஆதி அவனுடைய அகந்தையை நண்பனுக்காக, அவனுடைய உயிரை விடவா என்னுடைய 'நான்' என்னும் அகந்தை... நிச்சயம் இல்லை... 

"என்..." ஆதி வாயை திறக்கும் பொழுது அவர்கள் முகத்தில் ஒரு காரின் வெளிச்சம் பட, அந்த திசையை நோக்கி ஆதி திரும்ப அந்த காரிலிருந்து வேக வேகமாக இறங்கி வந்த ஆதவன் ஆதியை பார்த்த நொடி அதிர்ச்சியாய் உறைந்தாலும் அடுத்த நொடி நிம்மதி மனதில் பரவியது... 

விடாமல் பொலிந்து கொண்டிருந்த மழையும் குறைந்த பாடில்லை உதய்யின் அழுகையும் குறையவில்லை விட்டு விலக மனம் இல்லாமல் நின்றவன் அவன் நிதானம் பெரும் வரை அசையாதிருக்க உதய் தன்னுடைய இயல்பிற்கு வந்த நொடி அணைப்பை விட்டு விலகி ஆதியை தன்னுடைய தலை கொத்திக்கொண்டே பார்க்க அவனோ இமைக்காமல் உதய்யையே பார்த்து நின்றான்... 

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now