அத்யாயம் - 20

1K 34 16
                                    




"நைஸ் புட் பை தி வே அண்ட் ஐ லைக்ட் யுவர் ஹாஸ்ப்பிட்டாலிட்டி, யுவர் பேமிலி வாஸ் ஸ்வீட் (சாப்பாடு ரொம்ப அருமை, அதே மாதிரி உங்களோட வரவேற்பும் கூட. உங்க பேமிலி உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட்)" அனைத்தையும் ஒரு தலை அசைபோட்டு வாங்கிக்கொண்டான் உதய். இருவரும் நடக்க நடக்க அவர்களுக்கு பின்னால் மிஸ்டர் பிரவுன் ஆட்கள்.

"யூ க்நொவ் மிஸ்டர் மாதவன், மோர் தான் யுவர் கிரேட்டிவ், இன்னோவேட்டிவ் அண்ட் அட்வான்ஸ்ட் ஐடியாஸ் ஐ வாஸ் க்ரேட்டலி இன்ஸ்பயர்ட் பார் யுவர் க்கைன்ட் கேரக்டர் (உங்களுக்கு ஒன்னு தெரியுமா மிஸ்டர் மாதவன்? உங்களோட அறிவு, ஆற்றல், புதுமை, மேம்படுத்தப்பட்ட யோசனைகளை விட உங்க அமைதியும் அடக்கமும் புடிச்சிருக்கு)" ஐம்பதுகளின் இடைப்பகுதியில் இருந்தவர் நடையில் இருபதுகளிலிருந்தார். சில நொடிகளே நடந்தவர்கள் இப்பொழுது லிப்ட் முன் நின்றனர்.

"திஸ் ஏஜ் வாஸ் நாட் சிம்பிள் டு ஸ்டாண்ட் பிஹைன்ட் எ பிஸ்னஸ் எம்ப்பயர் லைக் யூர்ஸ் பட் யூ ஆர் பார் ப்ரம் ஆல் தோஸ் நார்மல் பீப்பில்ஸ் (இவ்வளவு பெரிய ஒரு தொழில் சாம்ராஜ்யம் பின்னாடி உங்கள மாதிரி இவ்வளவு சின்ன வயசுல இருக்கவங்க அவ்ளோ ஈஸியா இருந்துட்டு முடியாது, ஆனா நீங்க எல்லாரையும் மாதிரி சாதாரண ஆள் இல்ல)" அவன் தோள் தட்டி பாராட்டினார்.

"பட் வென் கம்மிங் டு மை எம்ப்லாய்ஸ் தெயர் சேப்டி வில் ஆல்வேஸ் பீ மை பர்ஸ்ட் ப்ரியாரிட்டி. லெட் தி இன்பர்மேஷன் பி பேக் ஹோப் யூ மேக் இட் ரைட் (ஆனா என்னோட ஊழியர்கள் பாதுகாப்புன்னு வரப்ப நான் எதையும் விட்டுகுடுக்க தயாரா இல்ல, அவங்க சேப்டி தான் எனக்கு முக்கியம். இந்த தகவல் எல்லாம் தப்பா இருக்கட்டும். எல்லாத்தையும் சரி பண்ணுங்க வேகமா)" என்றவர் அவனுடன் கை குலுக்கி அந்த லிப்ட்டில் நுழைந்துகொண்டார்.

பிரௌனை அனுப்பி வைக்க உதய் சென்ற பொழுது அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் உதய்யின் மூளையில் இப்பொழுது கூட ஓடிக்கொண்டே இருந்தது. அடங்காத ஆத்திரமும், இயலாமையும் உடல் மொத்தத்தையும் விறைப்பாக மாற்றியிருந்தது எத்தனை முயன்றும் தூக்கம் அருகில் கூட வரவேயில்லை.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now