அத்யாயம் - 18

1.4K 49 60
                                    


அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான்.

"டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு" கௌதமின் காரில் அமர்ந்திருந்த தமிழ் முகத்தில் சிறு எரிச்சல். கௌதமிற்கோ தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.

"ஆதி வாடா தூக்கம் வருது" நண்பனின் கெஞ்சல் மொழிகளோ அதிலிருந்த களைப்போ ஆதியின் செவிகளில் எட்டாமல் அவனுடைய தனி உலகில் லைத்திருந்தான் நிகழ் காலமும் கவலை அளிக்கவில்லை எதிர் காலமும் கவலை அளிக்கவில்லை அவனுக்கு இப்பொழுது, இந்த நொடி மட்டுமே ஆனந்தம் தந்தது காரணமே இல்லாமல்... ஒருவேளை மனதில் உள்ள கவலையை இவ்வாறு துரத்தி அடிக்கிறானோ என்ற எண்ணமும் அவன் முகத்தில் இருந்த சந்தோசத்தின் முன்னாள் சிலு சில்லாய் சிதறியது.

"வேலைய விட்டுட்டு வந்து ஆட்டத்தை பாரு... மனசுல ராஜான்னு நெனப்பு" இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு மனிதனால் இவ்வளவு துள்ளலாக இருக்க முடியுமோ என்ற கேள்வியும் திருமண வயதில் தங்கையை வைத்து எந்த நம்பிக்கையில் கை நிரம்ப வருமானம் கிடைக்கும் வேலையை விடுபவன் மூடன் என்ற ஆதங்கத்தில் தமிழ் மொழிந்தான்.

"இல்ல... அது அவன் வேலைய விட்டுட்டு வந்த சந்தோசம் இல்ல என் வேலையையும் சேத்து பறிச்சதுக்கான ஆர்ப்பரிப்பு" தனக்கே தெரியாமல் ஆதி, கௌதமிற்கும் சேர்த்து விடுதலை பத்திரம் அனுப்பி வைத்துவிட்டான் அவர்கள் மேனேஜரிடம் அதை பற்றி கேட்டால், "நான் இல்லாம நீ இருக்க மாட்ட தான மச்சான் அது தான் உன் மனசு அறிஞ்சு ஒரு சிறிய உதவி தங்களுக்கு" என்று தூய தமிழில் முடித்தான்.

"அது எப்படி மச்சான் ஒருத்தன் வாழ்க்கைல கிறுக்கு தனத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்து வாழ முடியுது?" ஆதியை பற்றி பல நாட்களாகவே இருந்த அந்த கேள்வியை இன்று கெளதம் தமிழிடம் கேட்டு விட்டான்.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now