அத்யாயம் - 1

6.1K 101 118
                                    

வணக்கம் தமிழ் நண்பர்களே

கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி. "பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்".

போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன், "டேய் அண்ணா.. என்ன டா பண்றீங்க உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு என் உயிரே போகுது" பதறிய படியே ஓடி வந்தாள் படித்து கொண்டு இருந்த புத்தகத்தை வைத்து விட்டு.

"வந்துட்டடா என் தங்கச்சி, அடியேய்ய்ய்... என் ராசாத்திதிதி... எங்க அம்மா பெத்த தெய்வமே, அண்ணனை நல்ல நேரத்துல தா மா வந்து காப்பாத்திருக்க. இங்க இருக்கான் பாரு இந்த திருட்டு பய அந்த பிள்ளையை எப்படி ஆச்சு இன்னைக்கு கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்றேனு சொன்னான் அவனையும் நம்பி...." அவன் குரல் சற்று உயர்த்தும் பதறி அவன் வாயை மூடினாள் திவ்யா.

"டேய் கத்தி கத்தி வீட்டையே எழுப்பிராத டா" ஹரி விஷ்ணுவை கெஞ்சியபடியே பின்னிருந்து அவனை படியில் தள்ளினான், "டேய் நா என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்டா, கொஞ்ச நேரம் பொறு டா" என்று படியிலேயே அமர்ந்து விட்டான்."இன்னைக்கு எனக்கு சங்கு கன்பார்ம்" ஹரி. போதையில் இருந்தாலும் விஷ்ணுவை விட எப்பொழுதும் தெளிவாகவே இருப்பான்.

"ராசாத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தேன்ல.... ஆ... அவனையும் நம்பி போனேன் டா நா. ஆனா அவன் அங்க என்ன பண்ணான் தெரியுமா...?"

வீட்டின் இருளில் தன் கூர்மையான பார்வையை படர விட்டு எவரும் இல்லை என்று உறுதி செய்த பின் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள் திவ்யா, "ராசாத்தி ..ராசாத்தினு கூப்புடாதடா கேவலமா இருக்கு".

"ஆமா இப்ப இது தான் ரொம்ப முக்கியம் பாரு" ஹரி அவளை கடிந்தான்.  வலியில்துடித்தவன், "ஏன் டா ராசாத்தி அண்ணனை கிள்ளுன?" கண்ணில் நீர் கோர்த்து கேட்டான் விஷ்ணு பாவமான முகத்துடன்.

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now