அத்தியாயம் - 23

857 33 55
                                    


"சார் மிஸ்டர் மாதவன் நம்மள க்ளோஸா மானிடர் பண்ற மாதிரி நியூஸ் வந்துச்சு. அதுவும் கோவா ரெஸார்ட்ல பன்றாங்க" நீரஜ் தழல் முன் சில படங்களை வைத்தான் அவன். கண்களிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அந்த புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்தவனின் இதழ்கள் கோணலாகப் புன்னகை செய்தது. 

"தழல் கோட்டைக்குல்லையே வரத் தைரியம் வந்துடுச்சா மாதவன் உனக்கு? சரி வா லெட்'ஸ் சீ வாட் யூ கேன் டூ" 

ஏளன புன்னகையோடு உதயை நினைத்துச் சிரித்தவன் கண்கள் சில தினங்களுக்கு முன்னர் உதய் கொடுத்தனுப்பிய அந்த கோப்பை மீது விழுந்தது. அந்த கோப்பும் அதனுடன் வந்த உதயின் திமிரான செய்யும் தழலை உச்சக்கட்ட கோவத்தில் ஆழ்த்தியிருந்தது. 

'எவ்வளவு திமிர்' மொத்த அலுவலக அறையையும் அன்று சூறையாடியிருந்தது அவன் சினம். இப்பொழுது வரை அந்த கோப்பை பார்த்துப் பார்த்து வெறித்தனமாக வேலையைப் பார்க்கத் துவங்கினான். தொட்டுக் கூட பார்க்காத அந்த கோப்பையை விட அவன் உழைப்பு மீது அதீத வெறி, 

"இத கோட் பண்ணிடுங்க. கோவால எந்த லெவல்க்கு அவன் முன்னேறிருக்கான்?" - தழல் 

"ஸ்வீப்பர் வச்சு நம்ம ரிசார்ட் சறவுண்டிங்ல மானிடர் பண்ணிருக்காங்க, மினி ஸ்பை கேமரா எண்ட்ரன்ஸ்ல இருக்க ஜங்ஷன் டிடெக்டர்ஸ் ஐடென்டிபை பண்ணிடுச்சு, ஒரு மைக்ரோ ஸ்பீக்கர் லபோர்டரில இருக்க மத்த டிடெக்டர்ஸ் கூட சேந்து வந்தனால கண்டு பிடிக்கக் கொஞ்சம் லேட் பட் ஒன் டேல கண்டு புடிச்சாச்சு சார்" ஆய்வகத்தில் ஸ்பீக்கர் என்றவுடன் உச்சக் கட்ட கொதிநிலைக்குச் சென்றான் நீரஜ் தழல். 

"வாட் தி ஹெல் இஸ் திஸ்? லேப்ல ஸ்பீக்கர், அத கண்டுபுடிக்க இவ்ளோ நேரமா தேவ? ஆன் தி பர்ஸ்ட் ப்லேஸ் உன் செக்யூரிட்டி டீம் மீறி ஒரு தூசு கூட உள்ள வர கூடாது, இதுல அந்த மாதவன் ஆள் ஒருத்தன் உள்ள வந்தது மட்டும் இல்லாம ஸ்பை கேமரா, ஸ்பீக்கர்-னு நீ சொல்லிட்டே போற. இஸ் திஸ் யுவர் காட்டேம் செக்யூரிட்டி? (Is this your goddamn security?) விரேஷ்" 

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now