அத்தியாயம் - 14

973 41 16
                                    

"நூத்தி ஏழு... நூத்தி எட்டு" 

அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி... அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்... 

"மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு" அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்... 

"இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்" பொறுமையை இழந்துக் கத்தினான் ஆதி... 

'இவன் செஞ்சாலும் செய்வான்' தொலைக்காட்சியை அமைதியாக ஆஃப் செய்து விட்டான் கெளதம்...

"இந்த ஆளு எப்டி டா செத்தான்?" தலையை பிய்த்து கொள்ளும் அளவிற்கு குழப்பம் மூளையை நிறைத்திருந்தது...

"கேக்குறான் பாருக் கேள்வியை எவ்ளோ நேரம் மாடு மாதிரி அந்த நியூஸ் காரன் கத்திட்டு இருந்தான்ல செவுடன் மாதிரி என்கிட்டே கேக்குற?"

"இல்ல டா எனக்கு சந்தேகமா இருக்கு... சரி உதய் ஏன் அவங்க பழைய வீட்டுல இருக்கான்னு தெரிஞ்சதா?" 

"ம்ம்ம்ஹ்ம்ம் அவன் ஆதவன்கிட்டயே சொல்லலையாம் ஆனா விஷ்ணு தா பிரச்சனைன்னு நெனக்கிறேன்... ஒழுங்கா அவன்கிட்டயும் பேச முடியல"

தலை அசைத்துக் கேட்டவன், "என்னோட வண்டி சாவி யார்கிட்ட இருக்குது?"

"ராசா வெட்டு வாங்குனது பத்தலயா ஆக்சிடன்ட் ஆகி இன்னும் பத்து நாள் இங்க இருக்க ஆசையா?" - தமிழ்

"என் உயிரை விட எனக்கு இப்ப முக்கியமான வேலை ஒன்னு இருக்குது வண்டி சாவிய தர முடியுமா முடியாதா?" 

"ஏண்டா எப்பையுமே உன் இஷ்டத்துக்குத் தான் எல்லாத்தையும் செய்வியா?" கையில் இருந்த ஊசியை உருவிய ஆதியை பார்த்து கோவத்தில் கத்தினான் தமிழ்...

இணையா துருவங்கள் (Completed)Where stories live. Discover now