அலை - 4

400 21 1
                                    

விறுவிறுப்பான அந்த காலைப் பொழுதில், கூட்ட நெரிசலோடு சென்னை மாநகரின் வெம்மையும் இணைந்து சொல்லவே வேண்டாம். வெளுத்து வாங்கியது வெயில். கடற்கரை காற்று சற்று இதமளித்தாலும் முடியவில்லை அவனால்.

இதில் தலையில் வேறு பாறாங்கல்லாய் கனத்தது அந்த ஹெல்மெட். மூச்சு விடவே சிரமம் என்னும் நிலை வர, கண்களுக்கு மட்டுமே பார்வை வழங்கிய கண்ணாடியைத் திறந்து, ஆசுவாச மூச்சு வாங்கினான். அந்த நிம்மதி மூச்சு கூட சில நொடிகள் தான் விட முடிந்தது.

மீண்டும் மூடிக்கொள்ள, வியர்வை முகத்தை நனைத்து, கழுத்து வழியாக உடலில் பாய துவங்கியது. சரி கை, கால்களுக்காவது காற்றை கொடுக்க நினைத்தாலும் முடியவில்லை.

ஒரு மணி நேரமாக செல்லும் வாகனத்தின் வேகம், முதுகே வலித்துவிட்டது. தங்களைக் கடந்து செல்லும் சைக்கிள் ஆட்டோவை நிறுத்தி சென்று விடலாமா என்ற எண்ணம் கூட உதிக்க துவங்கிவிட்டது.

"கொஞ்சம் வேகமா தான் ஓட்டேன் ம்மா..." பொறுமை காற்றில் பறக்க கேட்டே விட்டான்.

"என்னோட ஹையஸ்ட் ஸ்பீட் சார் இது. நான்லாம் தனியா போறப்ப வண்டி முப்பதைத் தாண்டாது. இன்னைக்கு உங்களுக்காக ஸ்பெஷல், நாப்பதுல போறேன்..." தலையைத் திருப்பி அவள் அவனுக்கு பதில் கொடுக்க, தலையில் அடிக்க முடியாமல் ஹெல்மெட்டில் அடித்துக்கொண்டான்.

அந்த ஹெல்மெட்டை தொட்ட பிறகு தான், அந்த நிறமே அவன் நினைவில் வந்தது. பெண்களுக்கு அதிக பிடித்தமான இளஞ்சிவப்பு நிறம் அது. அடிக்கடி தன்னை சிலர் திரும்பி திரும்பி பார்த்து செல்வதன் பொருள், இப்பொழுது தான் புரியவே செய்தது.

"எப்பா! ரொம்ப பெரிய சலுகை தான்..." முகத்தைத் தூக்கி வைத்து கேலி செய்வது அப்பட்டமாக தெரிந்தது.

"அவ்ளோ அவசரம்னா போங்களேன், வண்டிய நிறுத்துறேன்." வாகனத்தை ஓரமாக நிறுத்தப் போனவள் கோவம், நன்கு தெரிந்தது.

கிட்டத்தட்ட சாலையின் ஓரத்தில் வாகனத்தை ஒதுக்கப் பார்க்க, பதறிய அஸ்வின் பின்னிருந்து அவள் கைகளுக்கு இடையில் தன்னுடைய கையை விட்டு, ஹாண்ட்பாரினை முறுக்கி வேகத்தை அதிகரிக்க, விழி விரித்து அவனது செயலை மிரட்சியோடு கிரகிக்கும் முன்பே பறந்திருந்தது, அவன் கைகளில் ஆரோஹியின் செல்லக் குழந்தை.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now