அலை -11

477 21 0
                                    

வீட்டிற்குள் முழுதாக நுழையும் முன்பே புயலென தன் மேல் வந்து விழுந்த பெண்ணை பார்த்த அஸ்வினின் உடல் விறைத்துவிட, தலை தன்னாலே திரும்பி மனைவியை பார்த்தது.

தன்னுடைய கணவனை இறுக்கமாக கட்டி நிற்கும் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியாமல் போகுமா? ஆனால் வேதனையோ, எச்சரிக்கையோ ஆரோஹிக்கு சிறிதும் உருவாகவில்லை. யவ்னிகா, அஸ்வின் மார்பில் அடைக்கலமான நொடி பயத்தில் தன்னை பார்க்காமல், ஒருவித தவிப்போடு தன்னை பார்க்கும் கணவன் இருக்க அவளுக்கென்ன பயம்?

அதோடு அவன் கைகள் தன்னுடைய இறுக்கத்தை வெளியில் காட்டாமல் காற்சட்டைக்குள் ஒளித்துக்கொள்ள, அதை கண்ட ஆரோஹிக்கு உதடு வளைந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது.

இதில் யவ்னி ஏதோ அஸ்வினிடம் கூறிக் கொண்டிருக்க, தனக்கு பக்கவாட்டில் நின்ற ஆரோஹியை அவள் கவனிக்கவில்லை. ஆரோஹி மெதுவாக அவளுக்கு பின்னிருந்த இடைவெளியை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்து சைகை மொழியில் யவ்னியை அணைத்துக்கொள்ள கூற, அவன் மனைவியை தீயாய் முறைத்தான்.

கேலியாக வளைந்த அவள் இதழ்களை அசைத்து மௌனமாய், 'ஓ, ரொமான்ஸ் பண்ண தெரியலயோ' என கேட்க, இன்னும் அஸ்வினிடம் முறைப்பு கூடி கண்கள் சிவந்தது.

அவன் கோவம் உணர்ந்தவள் விளையாட்டை கைவிட்டு அவனை பதிலுக்கு முறைத்தாள், 'இன்னும் என்ன கட்டிபுடிச்சிட்டு?' என்று.

உடனே யவ்னியை தன்னைவிட்டு பிரித்தான். "யவ்னி உன்ன இங்க வர வேணாம்னு சொல்லியிருக்கேன்ல?"

யவ்னி, "நீ அலவ் பண்ணலைனா நான் இங்க வர கூடாதா அஸ்வி? நீ எனக்கு ஒரு கால் பண்ணியே மோர் தன் டூ வீக்ஸ் ஆச்சு. டூ யு க்நோ ஹொவ் மச் ஐ மிஸ்ட் யூ? நீ வரப்போறதில்லனு தெரிஞ்சு தான் நான் இங்க வந்துட்டேன்."

அஸ்வின், "யவ்னி, லெட் மீ ஸ்பீக்."

யவ்னி, "நோ யூ டோன்ட் ஸ்பீக். எத்தனை மிஸ்ட் கால்ஸ், எத்தனை மெசேஜ், எதுக்கும் நீ ரிப்ளை பண்ணல. நேர்ல பேசுறேன் நேர்ல பேசுறேன்னு மட்டும்தான் மெசேஜ் வருது."

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now