அலை - 18

364 13 6
                                    

தான் கேட்ட செய்தியை கிரகிக்க முடியவில்லை என்பதை விட அஸ்வினால் நம்ப முடியவில்லை. ரிப்போர்ட்டை மீண்டும் சரி பார்க்க வலியுறுத்தினான். அவனை இன்னாரென அவன் பூர்த்தி செய்திருந்த படிவத்தில் அறிந்துகொண்டவர் அஸ்வின் மனநிலையை அறியாமல் இல்லை. 

"உண்மைய கிரகிக்க முயற்சி பண்ணுங்க அஸ்வின். இங்க பேசிக் டெஸ்ட் தான் எடுத்துருக்கோம், நீங்கனு தான் எல்லா டெஸ்டும் இவ்ளோ வேகத்துல எடுத்தது. டிரீட்மென்ட்க்கு வேற ஹாஸ்பிடல் போகிறது தான் நல்லது. யோசிங்க" 

அந்த மனிதர் பேசி சென்றது எதுவும் அவன் செய்வகளை அடையவில்லை. உலகமே இரண்டு மொத்த அண்டத்தின் பாரமும் தன்னுடைய மார்பினில் ஏறியது போல் அத்தனை கணம். கால்கள் வலுவிழந்து சுவற்றில் சாய்ந்தவன் செய்வதறியாது நெற்கதியில் நின்றான்.

விலையில்லா ஆசையில் ஆவலாய் அவளோடு ஒரு வாழ்க்கையை துவங்க கங்கணம் கட்டியவனுக்கு இறைவன் கொடுத்த இந்த சாபம் எந்த வகையில் ஏற்புடையதாக இருக்குமென அவன் நினைத்தானோ, கையில் கொடுத்த அழகிய பூ மாலையை மலர்கள் உதிர பறித்துவிட்டான். 

நினைத்து பார்க்கையிலே விதியின் மீது அதீத கோவம். தனிமை தலைத்தட்டும் நேரமெல்லாம் தலை வருடி நானிருக்கிறேனென வருடி செல்லும் காற்று கூட இன்று வெப்பத்தை உமிழ்ந்து அவனோடு பகைமை பாராட்டுகிறது. 

மனைவி இருந்த அறையில் பல நடமாட்டங்கள் நடந்தது. மொத்தமாய் கருப்பாகி ஏதோ ஒரு புள்ளியாய் சிரித்த முகத்தோடு மனைவி தூரத்தில் நிற்பது போல் தவிப்பு அஸ்வினுள். அடுத்து என்ன செய்வதென கூட புரியாமல் தடுமாறிய நேரம் அஸ்வின் அன்னை அஸ்வினுக்கு அழைப்பு விடுத்தார். 

இயந்திர கதியில் கைபேசியை எடுத்து காதில் வைத்தவனுக்கு புத்துணர்ச்சியாக அன்னை குரல் ஒலித்தது. 

"என்ன அஸ்வின் பார்ட்டி எல்லாம் எப்படி போச்சு, என் மருமகளை எல்லாருக்கும் புடிச்சிருக்குமே. அவ பேசலாம் தேவையில்லைடா அஸ்வின். கொஞ்சமா சிரிச்சாளே போதும்" 

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now